[உபுண்டு_தமிழ்]கணியம் – இதழ் 19

Shrinivasan T tshrinivasan at gmail.com
Wed Jul 31 18:09:42 UTC 2013


http://www.kaniyam.com/release-19/

வணக்கம்.

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.



    சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ்
மின்னூல்கள்‘ http://FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை
வெளியிட்டுள்ளது.

    ஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘
கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.

    MySQL க்கு புத்தகம் எழுதிய நித்யா அவர்கள் ‘எளிய தமிழில் GNU/Linux’
ன் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1

    மேலும், இந்தியா முழுதும் இந்த மாதம் ‘பைதான் மொழி மாதம்‘ என
கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பைதான் பயிற்சிப்பட்டறைகள்
நடத்தப்படுகின்றன. உங்கள் ஊரிலும் நடத்த எங்களுக்கு எழுதவும்.
http://in.pycon.org/2013/python-month இந்த இதழை சிறப்பாக வடிவமைத்த
‘ஆளுங்க‘ அருண் அவர்களுக்கு நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை
யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட
வேண்டும்.



நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor at kaniyam.com



பொருளடக்கம்

    எளிய தமிழில் GNU / Linux – மின்நூல்
    க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)
    லுபன்டு -  ஒரு பார்வை
    கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி III
    ஒரு சமூகமாக சோதித்தல் : நீங்கள் உபுண்டுவிற்கு உதவுவது எப்படி?
    காலிபர் (Calibre) – மின் நூலகம்
    எளிய தமிழில் WordPress – 3
    ஹெ.டி.எம். எல்- 5 பட விளக்கம்
    எளிய செய்முறையில் C/C++ – பாகம் 8
    எளிய GNU/Linux commands
    துருவங்கள்
    உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்
    4 Digits -   என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!!
    லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்
    நீங்களும் பங்களிக்கலாமே
    கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை
    ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
    கணியம் வெளியீட்டு விவரம்



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge :     http://www.collab.net/svnedge


More information about the Ubuntu-l10n-tam mailing list