[உபுண்டு_தமிழ்]அறிவிப்பு: ஜூன் மாத கட்டற்ற கணிமை கூடுதல்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sun Jun 13 06:54:45 BST 2010
நண்பர்களே,
கடந்த நான்கு மாதங்களாக சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள எம் ஐ டி வளாகத்தில் உள்ள என் ஆர் சி பாஸ் மையத்தில் கட்டற்ற கணிமை தொடர்பான
கலந்துரையாடல்கள் தமிழில் நடைபெற்று வருவதை தாங்களனைவரும் அறிவீர்கள்.
அதன் இம்மாத தொடர்ச்சி வரும் சனிக்கிழமை - 19 ஜூன் 2010 அன்று நடைபெற உள்ளது. தமிழ் இணைய மாநாடு 2010 இல் கலந்து கொள்வது,
வரும் மாதங்களில் ஒரு நாள் கட்டற்ற கணிமை தொடர்பான கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
தாங்களும் எந்தவொரு தலைப்பிலும், கட்டற்ற கணிமை தொடர்பாக, தங்களுக்கிருக்கும் ஞானத்தினை தமிழில் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி தாங்கள் விவாதிக்க விரும்பும்
கருத்துக்களை http://kanimozhi.info/கட்டற்ற_தமிழ்க்_கணிமை_பகிர்ந்துரையாடல்/19-06-2010 பக்கத்தில் இடலாம். மாறாக எமக்கும்
மடல் அனுப்பலாம்.
உங்களை வரும் சனிக்கிழமை கூடுதலில் எதிர்பார்க்கிறோம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list