[உபுண்டு_தமிழ்]மாதாந்திர தமிழ்க் கணிமை & கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பக் கூடுதல்

amachu amachu at ubuntu.com
Mon Jan 25 13:58:33 GMT 2010


வணக்கம்,

வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு மாதமும் சென்னை, 
குரோம்பேட்டை, MIT வளாகத்தில் அமைந்துள்ள NRCFOSS வளாகத்தில் தமிழ்க் கணிமை & கட்டற்ற 
மென்பொருள் தொழில்நுட்பக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்திய லினக்ஸ் குழு - சென்னை பிரிவின் மாதாந்திர கூட்டத்தை போலவே ஓர் வாரத்திற்கு 
முன்னர் அளிக்கையிட அழைப்பு விடுக்கப்பட்டு விக்கி பக்கம் அமைக்கப்படும். இந்நிகழ்வு இரண்டு 
அம்சங்களை கொண்டதாகத் திகழும்.

1) கட்டற்ற தமிழ்க் கணிமை தொடர்பான விஷயங்கள்,

2) கட்டற்ற மென்பொருள் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களை எடுத்துரைத்தல்

கட்டற்ற தமிழ்க் கணிமை சார்ந்த தங்களது படைப்புகள் & கட்டற்ற மென்பொருள் சார்ந்த தங்களது 
அனுபவங்களை மொழிச் சிக்கலேதுமின்றி எடுத்துரைக்க இந்நிகழ்வினை குழுமத்தார் பயன்படுத்திக் 
கொள்ளலாம்.

தேதி: பிப்ரவரி 20

நேரம்: மாலை 3.00 மணி தொடங்கி 5.00 மணி வரை

முதற் கூடுதல் பற்றிய அறிவிப்பிற்காக காத்திருங்கள் :-)

--

ஆமாச்சு











More information about the Ubuntu-l10n-tam mailing list