[உபுண்டு_தமிழ்]உபுண்டு லுசிட் பீட்டா - iok இல் தீர்க்கப்பட வேண்டிய வழு ஒன்று.

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Tue Apr 27 06:52:18 BST 2010


2010/4/27 suji A <suji87.msc at gmail.com>:
> இந்த பிழை iok-1.3.10 -ல் திருத்தப்பட்டுள்ளது. தற்போது லுசிட் லினக்ஸில்
> இருப்பது iok-1.3.9, விரைவில் இது update செய்யப்படும்.
>

தகவலுக்கு நன்றி.

தங்களது launchpad பயனர் பெயரை அவ்வழு அறிக்கைக்கு bug-assignee  ஆக நான்
சேர்த்துவிடவா ? சரியென்றால் சேர்க்கப்பட்டபின் தங்களது மேற்குறிப்பிட்ட
தகவலைத் தாங்களே அங்கும் பதிந்தது அதன் பின் நாம் வழு நிலையை (Status ஐ)
In Progress என மாற்றிவிடலாம். உபுண்டுக்கான பொதி மேம்படுத்தப்பட்ட பின்
Fix committed என முடித்து விடலாம். பதில் எதிர்பார்க்கிறேன்.

மேலும்  இம் மென்பொருளிற்கான விவரிப்புகளில் திருத்தங்கள்  பெடோரா
மேலோடையினரால்உள்ளடக்கப்பட வேண்டியுள்ளன. காட்டாக, அவர்கள் தற்போதைய
விவரிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர் :


// iok is Indic Onscreen Keyboard. It currently shows Inscript keymaps
for following Indian languages.Assamese, Bengali, Gujarati, Hindi,
Kannada, Marathi, Malayalam, Punjabi, Oriya, Sindhi, Tamil, Telugu. //

அது https://fedorahosted.org/iok/ பக்கத்தில் முதல் கூற்று.
அப்பக்கத்தில் m17n இல் உள்ள   இன்ஸ்கிரிப்ட் விசைமுகப்புகளுக்கு மட்டுமே
iok பயன்பாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.

m17n-இன்ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல் xkb க்காக ஆக்கப்பட்டுள்ள
ஒருங்குறிக்கான (இன்ஸ்கிரிப்ட் மற்றும் இன்ஸ்கிரிப்ட் அல்லாத)
விசைமுகப்புகளையும் ஏற்கனவே iok கையாளுவதால், தொடர்பான விவரக்
குறிப்புகள் உள்ள இடங்களில் எல்லாம் திருத்தங்கள் தேவை என
மேலோடையினருக்குச் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

மேலும் சில கருத்தேற்றங்களை விரைவில் முன்வைப்பேன்.

~சேது


> 2010/4/16 கா. சேது | කා. සේතු | K. Sethu <skhome at gmail.com>
>>
>> நான் தாக்கல் செய்துள்ள
>> https://bugs.launchpad.net/ubuntu/+source/iok/+bug/563635 வழு அறிக்கை
>> வாசிக்கவும்.
>>
>> உபுண்டு 10.04 (லுசிட் லின்க்ஸ்) பீட்டா-2 இல் சோதிக்கையில் நான்
>> கண்டறிந்தது; iok on-screen keyboard இல் Tamil (அது m17n இலுள்ள
>> இன்ஸ்கிரிப்ட்) மற்றும்  xkb-Tamil, xkb-Tamil Unicode ஆகியன
>> இயங்குகின்றன. ஆனால் மேலுமொரு புதிதாக உள்ளடக்கப்பட்ட xkb-Tamil Keyboard
>> with Numerals மட்டும் iok வழி இயக்கவியலாமை உள்ளது.
>>
>> சுஜி மற்றும் ஆமாச்சு  அவ் அறிக்கைக்கு bug-assignee ஆக தங்கள் இருவரில்
>> ஒருவர் பெயர் முன்வைப்போமா அல்லது வேறு யாராவது எனில் அங்கு அவ்வாறு
>> நியமிக்கும்படி கேட்டுக்கொள்கிறேனf.
>>
>> மேலும் xkb இலும் iok இலும் தமிழ் வி.ப. க்களின் பெயர்கள் சீரமைக்க
>> வேண்டும் எனவும் கருதுகிறேன். அது பற்றி பின்னர் எனது கருத்துக்களை
>> எழுதுவேன்.
>>
>> ~சேது
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
>
> --
> Regards,
> Suji A.
>
> http://suji25.wordpress.com/
> http://innovativegals.wordpress.com/
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


More information about the Ubuntu-l10n-tam mailing list