[உபுண்டு_தமிழ்]கடந்த இணையரங்க உரையாடல் விவரங்களும் நாளைய உரையாடலுக்கான அழைப்பும்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Sun Oct 25 07:27:04 GMT 2009


2009/10/24 ramadasan <amachu at ubuntu.com>

>  பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது.  விரைந்து முடிக்க
> வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல்
> மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
>
>
ஆறு மாத்திதற்கு ஒரு முறை என புதிய வெளியீடு வரும் வழக்கம் இத்தகையப்
புத்தகமொன்றின்  ஆக்கத்தை கடினமாக்குகிறது எனக் கருதுகிறேன்.

ஆண்டு தோரும் ஏப்பிரலில் வரும் yy.04 வெளியீட்டில்தான் yy.10 வெளியீட்டில் விட
கூடுதல் மாற்றங்கள் உள்ளட்டக்கப்படும் வழக்கம் உள்ளதாக முன்னர் யாரோ
குறிப்பிட்டிருந்ததை எங்கோ ஒரு வலைபக்கத்தில்  பார்த்திருக்கிறேன். ஆனால்
உள்ளிடல் முறைமைகளில் முன்னிருப்பு நிலை மாற்றம் (scim குப் பதில் ibus),
grub->  grub2 மேம்பாடு, Add Remove Programs க்குப் பதில் Ubuntu Software
Centre என பல மாற்றங்களை அவதானிக்கையில் 8.10 க்கும் 9.04 க்கும் இடையே உள்ள
மாற்றங்கள் விட 9.04 க்கும் 9.10 க்கும் இடையேதான் மாற்றங்கல் கூடுதலாக
உள்ளதாகவே எனக்குப் புலப்படுகிறது.

காட்டாக கொவாலாவில் முன்னர் போலல்லாது m17n விசைபலகைகள் எல்லாம் இறுவட்டிலே
வருவதுடன் நிறுவலின் போதே சேர்க்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் scim தொடர்பான
பொதிகள் உபுண்டுவின் main வழங்கியிலிருந்து பெற்று நிறுவ வேண்டியுள்ளது.

ibus வழி m17n இயக்கம் இலகுவாகவே இருப்பினும்  மேலும் மாறக்கூடிய உள்ளீடு தொடர்
ஒன்று உள்ளிட்டு முடியும் வரை ஒரு கறுமையான highlight (backlight) இருப்பது
தொந்தரவானது. (ஸிம் இயக்குகையில் scim-tables விசைப்பலகைகள் சிலவற்றில் அவ்வாறு
முற்காலங்களில் கண்டிருக்கிறேன்). மேலும் scim-tables களுக்கான 3 விசைப்பலகைகள்
இன்னமும் ibus-tables க்கு கொணரப்படவில்லை போலும். அவற்றில் இன்ஸ்கிரிப்ட்
மற்றும் ஃபொனடிக் (ஷப்தலிபி) ஆகியன m17n இலும் ஏற்கனவே உள்ளனவைகளே. ஆனால்
இரெமிங்கடன் பயன்படுத்துவோருக்கு scim அவசியமாகிறது.

எனவே ibus தற்போதைக்கு scim இன் இடத்தை எடுக்கப்போவதில்லை. ஆனால் வரும்
வருடங்களில் scim மேம்பாடுகளும் பயன்பாடும் வெகுவாகத் தேயலாம். தற்போது துரித
தொடர் வளர்ச்சி பெற்று வரும் ibus மற்றும் மெதுவாகவே வளரும் imbus ஆகியனவற்றில்
ஒன்று பெறும்பான்மை விருப்பப் பயன்பாடு ஆகலாம்.

அடுத்த வருட ஏப்பிரலில் வரவுள்ள 10.04 லூசிட் (அல்லது லுசிட்) லின்க்ஷ் (Lucid
Lynx) [ http://fridge.ubuntu.com/node/1914 ] நீண்டகால (LTS - 3-years)
துணையுடன் வரவுள்ளது.

எனவே தற்போது உள்ள பயனர் பார்வைக்கான ஆக்கங்களை 9.10 வெளிவந்து 3
மாதங்களுக்குள் ஒரு முற்பதிப்பாக மட்டும் வெளியிட்டு பலர் கருத்துகள் அறிந்து
அதன் பின் 2010 june -july காலத்தில் லூசிட்டில் உள்ள மாற்றங்கள் பார்த்த பின்
3 வருடங்களுக்கு தாக்குபிடிக்கக் கூடிய இறுதியாக்கம் வெளியிடலம் எனக்
குறிக்கோள் கொளலாமே ?

~சேது




> காஞ்சியிலும் சேலத்திலும் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் பற்றி பகிர்ந்து கொள்ளப்பட்டது.
>
> தமிழ் எழுத்துப் பிழைத் திருத்திக்காக ஒரு இலட்சம் சொற்கள் தமிழ் லெக்சிகனில் இருந்து எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. இது பெடோரா 12 இல் ஹன்ஸ்பெல்லில் தெரியவரும்.
>
> இன்டிக் ஆன்ஸ்கிரின் கீ போர்டுக்கான டெபியன் பொதி உருவாக்கப்பட்டுள்ளது.
>
> xkb விசைப் பலகைக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. xkb tamil unicode விசைப்பலகைக்கு எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
>
> OCR & தமிழ் நாட்காட்டி திட்டங்களில் பங்களிக்க மாணவர்கள் முன்வந்துள்ளனர்.
>
> உபுண்டு தமிழ்க் குழுமம் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் வட்டுக்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் திரட்டிய நிதியைக் கொண்டு பொதுவான அறக்கட்டளை உருவாக்கப்படும்.
> *அறக்கட்டளையின் நோக்கங்கள்:*
>
> பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
>
> அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான செயல்களில் ஈடுபடுதல்.
>
> --------------
>
> நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை மூன்று மணிக்கு irc.freenode.net வழங்கியின் #ubuntu-tam அரங்கில் விவாதம் நடைபெறும்.
>
> கலந்து கொள்ள http://webchat.freenode.net/ பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
>
> --
>
> ஆமாச்சு
>
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091025/655e19e9/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list