[உபுண்டு_தமிழ்]கடந்த இணையரங்க உரையாடல் விவரங்களும் நாளைய உரையாடலுக்கான அழைப்பும்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Sun Oct 25 02:52:08 GMT 2009


2009/10/24 ramadasan <amachu at ubuntu.com>

>  வணக்கம்,
>
> 04/10/2009 அன்று நடந்த இணையரங்க உரையாடலின் விவரங்கள் வருமாறு,
>
> [..]


>   கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் ...
>

ஐயகோ !

Koala - கோலா அல்ல. கொ-ஆலா என அவர்கள் பலுக்குவதை கொவாலா  என்று தமிழில் எழுத
வேண்டும். கோ-ஆலா, கு-ஆலா எனவும் மாற்று பலுக்கல்கள் உண்டு. ஆயினும் அப் பிராணி
வாழும் ஒஸ்திரேலியாவில்  கொ எனத் தொடங்கும் பலுக்கலே அநேகமானோரது என
அங்கிருந்து வந்த நண்பர் கூறினார். மேலும் கோவாலா என எழுதினால் அது கோவால் என்ற
பெயருடைய ஒருவரை கூப்பிடுவது போல உள்ளது. "கோவாலா, கோவால...." காதலன் பட
பாட்டில் போல. ;)

கீதா மேத்தா 1979 இல் ஆக்கிய கதை Karma Cola  அதில் Cola ஆனது Coca Cola போன்ற
பானங்கள் பெயரில் உள்ளது. Karma - வட இந்தியர் கர்மா எனவும் தமிழில் கருமா
எனவும் கூறப்படுவது அமெரிக்கர்கள் மற்றும் மேலைத்தேயத்தினர் அதை கார்மா அல்லது
காமா (non-rhotic / silent R) என க வையும் நெடிலாக்கி பலுக்குகின்றனர்.
மேத்தாவின் கதை வந்த பின்  Cola வை Kola என திரிபு படுத்தி Karma Kola என தூர
நாடுகளில் இந்திய பொருட்களை விற்பதற்கு பலரும் பயன்படுத்துவது.

எனவே koala க்கு கோலா தவிருங்கள்.

கருமிக் கோவாலா தான் கூடுதல் பொருத்தம்.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091025/ff6654f2/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list