[உபுண்டு_தமிழ்]கடந்த இணையரங்க உரையாடல் விவரங்களும் நாளைய உரையாடலுக்கான அழைப்பும்

ramadasan amachu at ubuntu.com
Sat Oct 24 18:33:31 BST 2009


வணக்கம்,

04/10/2009 அன்று நடந்த இணையரங்க உரையாடலின் விவரங்கள் வருமாறு,

பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது.  விரைந்து முடிக்க
வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல்
மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. 


காஞ்சியிலும் சேலத்திலும் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் பற்றி பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தமிழ் எழுத்துப் பிழைத் திருத்திக்காக ஒரு இலட்சம் சொற்கள் தமிழ் லெக்சிகனில் இருந்து எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. இது பெடோரா 12 இல் ஹன்ஸ்பெல்லில் தெரியவரும்.

இன்டிக் ஆன்ஸ்கிரின் கீ போர்டுக்கான டெபியன் பொதி உருவாக்கப்பட்டுள்ளது.

xkb விசைப் பலகைக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. xkb tamil unicode விசைப்பலகைக்கு எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

OCR & தமிழ் நாட்காட்டி திட்டங்களில் பங்களிக்க மாணவர்கள் முன்வந்துள்ளனர்.

உபுண்டு தமிழ்க் குழுமம் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் வட்டுக்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் திரட்டிய நிதியைக் கொண்டு பொதுவான அறக்கட்டளை உருவாக்கப்படும்.

அறக்கட்டளையின் நோக்கங்கள்:

பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.

அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான செயல்களில் ஈடுபடுதல்.

--------------

நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை மூன்று மணிக்கு irc.freenode.net வழங்கியின் #ubuntu-tam அரங்கில் விவாதம் நடைபெறும். 

கலந்து கொள்ள http://webchat.freenode.net/ பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

--

ஆமாச்சு


-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091024/d1035f3f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list