[உபுண்டு_தமிழ்]சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

ramadasan amachu at ubuntu.com
Thu Oct 8 05:04:09 BST 2009


-------- Forwarded Message --------
From: Selva Murali <murali1309 at gmail.com>
Date: Wed, 7 Oct 2009 21:18:19 +0530சேலத்தில் அக்.11 ல் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

சேலத்தில் வரும் அக்.11 ல் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு
நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கினை இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும்
விசுவல் மீடியா நிறுவனம், சென்னையில் ஐடி சேவைகள் வழங்கி வரும் லிமேசன்
டெக்னாலஜிஸ் நிறுவனம், மற்றும் தமிழ் செய்தி நிறுவனமான சங்கமம்லைவ்.காம்
ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

சேலம் வாசவி மஹாலில் நடைபெறும் இக்கருத்தரங்கில்  கட்டற்ற  (open source)
மென்பொருள்களின் அறிமுகம், அதனுடைய அவசியம் விளக்கப்படவுள்ளது. அடுத்ததாக
லினக்ஸ், ஃபெடோரா லினக்ஸ், உபுந்து போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றிய
அறிமுகமும், அவற்றை கணிப்பொறியில் எவ்வாறு நிறுவுவது, பயன்படுத்துவது
எப்படி என்பன போன்ற விபரங்களையும் விளக்கப்படவுள்ளது. லினக்ஸ்
பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு உண்டாகும், அவற்றிலுள்ள மேலும்
பயன்படுத்ததக்க வகையிலுள்ள மென்பொருள்கள் பற்றியும் அவற்றை விளக்கவும்
உள்ளனர். இப்பயிற்சியினை  சென்னையில் அமைந்துள்ள கட்டற்ற மற்றும் திறந்த
மூலமென்வள தேசிய மையத்தின் திட்டப்பொறியாளர் ராமதாஸ் அவர்கள்
வழங்கவுள்ளார். 


இதனைத் தொடர்ந்து விசுவல் மீடியா இயக்குநர் செல்வமுரளி கணிப்பொறி, இணையம்,
வலைத்தளம் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளார். மேலும்
சென்னையை சேர்ந்த மாப்டெக் நிறுவனத்தினரின் லினக்ஸ் அடிப்படையிலான
மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருட்களையும், கோவையை சேர்ந்த கேஜி லினக்ஸ்
சொல்யூசன்ஸ் நிறுவனத்தினரின் மென்பொருட்களும் அறிமுகப்படுத்தபட உள்ளன. 
மேலும் இணைய வழியாக இக்கருத்தரங்கினை ஒளிபரப்பவும் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுவருகிறது.

இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் செல்வமுரளி செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது : இக்கருத்தரங்கம் அதிக விலை கொடுத்து ஆபரேடிங் சிஸ்ட
உரிமையை வாங்க முடியாமல் அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தனிநபர்
கணிப்பொறி பயனாளர்கள், இணைய மையங்கள், கடைகளில் கணிப்பொறி
பயன்படுத்துவோர்கள், சிறுதொழில் கூட கணிப்பொறி பயனாளர்கள், தொழிற்சாலைக்
கணிப்பொறி பயனர்கள் பலருக்கும் இந்த கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவது
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தம் கணிப்பொறிகளில் தைரியமாய் நிறுவி,
சுதந்திரமாய் செயல்பட முடியும் என நம்புகிறோம்.

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு அனைவரையும்
வரவேற்கிறோம் என தெரிவித்தார். இந்த கருத்தரங்கின் போது ஓப்பன்சோர்ஸ்
மென்பொருட்கள் அடங்கிய சிடிக்கள் விநியோகிக்கப்பட உள்ளது
குறிப்பிடத்தக்கது. 
மேலும் விபரங்களுக்கு 99430-94945இச்சேதியை உங்கள் இணைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
http://www.tamilvanigam.com/index.php/businessnews/803--11-----.html

-- 
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com

--

ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: invitation-2-1.jpg
Type: image/jpeg
Size: 164616 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091008/609f41f4/attachment-0001.jpg 


More information about the Ubuntu-l10n-tam mailing list