[உபுண்டு_தமிழ்]பதிவிறக்கவுள்ள PPA பொதியொன்றின் gpg திறவுகோல் சேர்த்துக் கொள்ள [was: Re: IOK(Indic Onscreen Keyboard) ]

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Fri Oct 2 03:06:30 BST 2009


சுஜி IOK(Indic Onscreen Keyboard) இழையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

>>
>
> Click the Add button then a window prompted with the text entry, you just give the following line in that text box
>
> deb http://ppa.launchpad.net/suji87-msc/ppa/ubuntu karmic main
>
> when prompted, reload the software sources information, Don't worry if you see a warning about unverified software sources; we're going to fix that next.
<<

அவர் குறிப்பிட்ட எச்சரிக்கை என்னவென்பதை ஒரு திரைக்காட்சியின் வழியாக
பின்னர் எனக்குக் காட்டியுள்ளார். அத் திரைக்காட்சியில் அவதானிக்க
வேண்டிய பகுதியானதை எனது வலைத்தளத்தில் உள்ள பின்வரும் கோப்பில்
பாருங்கள் :

http://sites.google.com/site/sethussite/suji-gpg-key-error.png

அது ஒரு வழு நிலை அறிக்கையாகும்.

மென்பொருட் பொதிகளை வழங்கும் காப்பகங்களைப் (repositories)
பயன்படுத்துகையில் உபுண்டுவின் சொந்த காப்பங்களுக்கு (main, universe,
security, multiverse..) ஆன gpg பொது திறப்புகள் (public keys)
சேகரிக்கப்பட்டு apt  கட்டகத்தின் திறவுகோல் வளையத்தில் இற்றைப்
படுத்தப்படுவது தானியக்கமாக நடைபெறுவதாகும். apt-get update கட்டளை
அல்லது synaptic போன்ற செயலி வழியே பொதிகளின் மேம்பாடு தகவல்களை இற்றைப்
படுத்துகையில் ஏற்கனவே சேகரிப்பட்ட அவ்வாறானத் திறப்புகளில் மாற்றங்கள்
இருப்பின் மாற்றப்பட்ட திறப்புகள் apt இன் வளையத்துக்கு இற்றையாவதும்
தானியக்கமாக நடைபெறுவது.

அவ்வாறான சேகரிப்புகள் மூன்றாம் தரப்பு காப்பகங்களிலிருந்து ஆயின்
வழக்கமாக தானியக்காமாக நடைபெறா.  ஆனால் தற்போது பீட்டா நிலை அடைந்துள்ள
உபுண்டு 9.10 (கருமிக் கொவாலா) நிறுவலில் இருந்து PPA திறப்புகள்
தானியக்கமாக இற்றையாகும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது ! உபுண்டுவின்
Launchpad வலையில் PPA (Personal Package Archive)  எனப்படுவது தனி
நபர்கள் (அல்லது  குழுமங்கள்) மேலேற்றி பேணும் காப்பகங்களாகும்.  உபுண்டு
9.10 க்கு முன்னரான உபுண்டு வழங்கல்களில் ஒன்றைப் பயன்படுத்துகையில்
தற்காலத்திலும் PPA களின் திறப்புகள் தானியக்கமாக அல்லாமல் பயனரால்தான்
இற்றைப்படுத்தபட வேண்டும்.

தானியக்கமாக திறப்பு இற்றையாகவிடத்து, System->Administration->Software
Sources வழி Third-Party Software இல் APT line க்கு PPA இன் முகவரியை
சுஜி காட்டியாவாறு சேர்த்து Reload செய்கையில் மேற்காட்டிய வழு நிலை
அறிக்கை தோன்றும். அவ் அறிக்கையைப் புறக்கணித்து  Software Sources
செயலியை மூட முயலுகையில் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் முற்றாக்கப்
படவில்லை எனவும் மீண்டும் reload செய்யவும் என அறிவுறுத்தலும் வரும்.
அதையும் புறக்கணித்து Synaptic Package Manager அல்லது கட்டளை வரி வழியாக
அந்தப் பொதியை நிறுவ முயல்வோமானால், அந் நிறுவலுக்குத் தடை ஏதும்
இல்லாததையும் ஆனால் ஆக்கவுரிமைச் சான்றளிப்பு (Authentication) அல்லாத
நிலையிலேயே நாம் இற்றைப் படுத்துகிறோம் என்ற அறிவுறுத்தலும் காணலாம்.
மேலும் அதன் பின் ஒவ்வொரு தடைவையும் apt இன் தகவற்களை
மேம்படுத்துகையிலும் மேற்கூறிய வழு அறிக்கையும் தோன்றும்.

எனவே ஒரு PPA க்கான பொது திறப்பு apt இன் திறவுகோல் வளையத்தில்
தானியக்கமாக சேர்கப்படாவிடின் பயனர் அத் திறப்பை இற்றைப்படுத்த வழிமுறை
தேவையாகிறது. அது பின்வரும் படிகளாகும் (எடுத்துக்காட்டுக்கு நாம் சுஜி
முனவைத்துள்ள iok க்கான PPA பயன்படுத்தலாம்).

1.  நிறுவ உள்ள பொதி உள்ள Launchpad PPA இன் அறிமுகப் பக்கத்திற்குச் செல்லவும் :
https://launchpad.net/~suji87-msc/+archive/ppa/

2. அப் பக்கத்தில் "Adding this PPA to your system" தலைப்பின் கீழ்
"Technical details about this PPA" தொடுப்பைச் சொடுக்கி விரிவிக்கவும்.

3. விரிவாக்கப்பட்டு தெரியவரும் வரிகளில் "Signing key:" என்பதை
அவதானிக்கவும். நமது எடுத்துக்காட்டில் :

    1024R/21344001 (What is this?)

4. அதில் What is this ? என்ற தொடுப்பைச் சொடுக்கினால் வெளிவரும்
வழிகாட்டித் தகவல் பெட்டகத்தில் "Telling Ubuntu how to authenticate the
PPA" பகுதியில் எப்படி திறப்பைச் சேர்ப்பதற்கான கட்டளை
காட்டப்பட்டிருக்கும்.

நமது எடுத்துக்காட்டுக்கு 1024R/ அடுத்த எண்ணானது 21344001 . எனவே
பின்வரும் கட்டளை அந்த PPA க்கான திறப்பை apt இன் திறப்பு வளையத்திற்கு
இற்றைப்படுத்தும்.

sudo apt-key adv --keyserver keyserver.ubuntu.com --recv-keys 2134401

அதன் பின் sudo apt-get update செய்யுங்கள். முன்னர் வந்த வழு அறிக்கை வராது.


சில குறிப்புகள்:

அ) . சுஜியால் முன் வைக்கப்பட்டுள்ள iok ஆனது, Karmic வெளியீட்டுக்கான
பொதி போல பெயர் காட்டப்பட்டாலும் அது முன்னைய வெளியீடுகளிலும்
இயங்குகிறது. எந்த வெளியீடாயினும் பதிவிறக்க APT முகவரி deb
http://ppa.launchpad.net/suji87-msc/ppa/ubuntu karmic main  மட்டுமே.

ஆ). apt இன் திறவுக்கோல் வளையத்தில் சேர்க்கப்பட்டுள்ள திறப்புகளின்
பட்டியல் பார்க்க வேண்டுமானால் பின்வரும் கட்டளை இடுங்கள்.

sudo apt-key list

அல்லது "Software Sources" செயலியின் "Authentication" தத்தலில் பார்கலாம்.

இ). sudo apt-key adv ....  கட்டளை வரி செய்விக்கும் பணியினை வரைகலை
இடைமுகப்பினூடாகவே நிறைவேற்ற வழிமுறை யாருக்காவது தேவை எனில் இக்
குழுமத்தில் வினவும். நான் எடுத்துகாட்டுவேன். (எனக்கு கட்டளைவரி வழிதான்
இலகுவாகிறது!)

~சேது






சுஜி முன்வைத்துள்ள iok என்ற திரையில் தோற்றமாகும் விசைப்பலகைச் செயலியை


More information about the Ubuntu-l10n-tam mailing list