[உபுண்டு_தமிழ்]வாராந்திர இணையரங்க உரையாடல்
ramadasan
amachu at ubuntu.com
Sun Nov 29 13:54:57 GMT 2009
வணக்கம்,
இன்று நடைபெற்ற இணையரங்க உரையாடலின் போது கீழ்க்காணும் விஷயங்கள்
விவாதிக்கப்பட்டன.
1) பயனரின் பார்வை - புத்தகம் உபுண்டுவின் நீண்ட கால ஆதரவு வெளியீட்டினை
மையமாகக் கொண்டு திகழும். தற்போதைய வெளியீட்டின் ஆவணமாக்கம் அடுத்த மாத
இறுதிக்குள் நிறைவடைய கெடு கொள்ளப்பட்டுள்ளது.
2) குனு லினக்ஸ் பணிச்சூழலில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான
தமிழ்ச் சொற்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி
பெடோரா, CDAC சென்னை, NRCFOSS அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து வரும் டிசம்பர்
12, 13 தேதிகளில் சென்னை CDAC இல் நடைபெற உள்ளது. விவரங்கள் விரைவில்
பகிர்ந்து கொள்ளப்படும்.
3) கைப்பிடி தோழர்கள் என்ற பெயரில் உபுண்டு தமிழ்க் குழுமம் வட்டுக்களை
பகிர்ந்து கொள்ள முன்னர் ஏற்பாடு செய்திருந்த திட்டம் தபாலில் உபுண்டு
பெறும் திட்டத்தின் மூலம் மறுமலர்ச்சி பெறுகிறது. உபுண்டு வட்டுக்கள்
வேண்டுவோர் இலவசமாகவும் வி. பி. பி மூலமாகவும் வட்டுக்களை பெற வழி
செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க: http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd
வசதி படைத்தோர் வி.பி.பி மூலம் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
4) உபுண்டு தமிழ்க் குழும இணையதளம் புதுப் பொலிவினைப் பெற்றுள்ளது. இதனை
செய்து தந்துள்ள நமது தளப் பராமரிப்பாளர் சிவாஜிக்கு வாழ்த்துக்கள்.
பார்க்க களிக்க: http://ubuntu-tam.org
5) காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் சார்பில் இன்று உபுண்டு 9.10 வெளியீட்டு
விழா நடைபெற்றிருக்கும். விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
6) உபுண்டு தமிழ்க் குழுமம் கொண்டுள்ள சிறு நிதி கொண்டு ஏற்படுத்தப்படுவதாக
தீர்மானிக்கப்பட்டுள்ள அறக்கட்டளை டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் பதிவு
செய்யப்படும்.
விவாதத்தின்
விவரங்களுக்கு: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_29_11_2009
உபுண்டு தமிழ்க் குழுமத்தின் அடுத்த கூடுதல் டிசம்பர் ஐந்தாம் தேதி மாலை
மூன்று மணி தொடங்கி நடைபெறும்.
தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருந்தால் விவாதப் பொருளில் இட்டு
விவாதத்தில் கலந்து கொள்ளவும்.
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_05_12_2009
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list