[உபுண்டு_தமிழ்]உபுண்டு 9.10 கார்மிக் கோஆலா - வெளியீட்டு விழா
தங்கமணி அருண்
thangam.arunx at gmail.com
Tue Nov 3 20:32:01 GMT 2009
வணக்கம்,
கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை உபுண்டு தமிழ் குழுவின்
வாராந்திர கூட்டம் நடைப்பெற்றது.
இதில் ஸ்ரீனிவாசன், இரவி ஜெயா, இராஜீ மற்றும் தங்மணி அருண் ஆகியோர்
கலந்துக்கொண்டனர்.
கூட்டத்தில் உபுண்டுவின் புதிய பதிப்பான 9.10 கார்மிக் கோஆலா வரவை முன்னிட்டு
வட்டு வெளியீட்டு விழா நடத்துவது பற்றி மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
*விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் - *முக்கியமாக எங்கு நடத்துவது?, நிகழ்ச்சி
நிரல் என்ன? மற்றும் தலைமை தாங்க யாரை அழைப்பது?
*1.எங்கு நடத்துவது?*
(அ). பிர்லா பிளானட்டோரியம்
(ஆ). எம்ஐடி
(இ). கடற்கரையில்
*2.யாரை தலைமை உரையாற்ற அழைப்பது?*
(அ) திரு. டாக்டர்.அப்துல் கலாம்
(ஆ) பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள்
(இ)
*3. நிகழ்ச்சி நிரல் என்ன?*
(அ)கட்டற்ற திறந்த முல மென்பொருட்கள் - அறிமுகப் பேச்சு
(ஆ) எதற்கு உபுண்டு?
(இ) உபுண்டுவில் உள்ள மென்பொருட்டகள் - அறிமுகம்
(ஈ) அன்றாட நாட்களில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களை எப்படி பயன்படுத்துவது
மற்றும் அதில் உள்ள பிரச்சனைகள்
(உ) ஜி-டால்க் மற்றும் யாகூ அரட்டை - எம்பதி அறிமுகம்
(ஊ) பல்லூடக மென்பொருட்கள் - அறிமுகம்
(எ) வை-பை மற்றும் ஈதர்நெட் நெட்வொர்க் அமைப்புகளை எப்படி மாற்றுவது
(ஏ) உபுண்டு நிறுவல் பற்றிய நேரடி காட்சி விளக்கம்
(ஐ) தமிழ் தட்டச்சு எப்படி - ஐபஸ் ?
(ஒ) மடலாடற்குழுக்கள் மற்றும் சென்னை லினக்ஸ் பயனாளர்கள், இந்தியா பற்றிய -
அறிமுகம்
(ஓ)
(ஔ)
(ஃ)
*
4.எப்பொழுது நடத்துவது?
*
இதற்கு நிறைய தன்னார்வளர்கள் மற்றும் பணம் தேவைப்படுகிறது.
*குறிப்பு: *பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு இந்த வாரத்தில்
தொடங்குகிறது.
வேறு எதாவது சேர்க்கப்படனுமா?
வேறு எந்த முறையில் இந்நிகழ்ச்சியை நடத்துவது என்பது பற்றி பிற தகவல்களை
குழுவுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரின் சேவை மற்றும் ஆதரவு தேவைப்படுகிறது.
--
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20091104/a0115459/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list