[உபுண்டு_தமிழ்]இன்டுலினக்ஸ் 2009 சந்திப்பு

amachu amachu at ubuntu.com
Thu May 21 06:34:16 BST 2009


வணக்கம்,

இன்டுலினக்ஸ்(1) குழுமத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சந்திப்பு கடந்த மே 16, 17
தேதிகளில், மகாராஷ்டிர மாநிலம் பூனா நகரில் அமைந்துள்ள ரெட்ஹாட்
அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல், கலந்து கொண்டோர், ஆதரவாளர்கள் பற்றிய
விவரங்களுக்கு 
http://www.sarai.net/resolveuid/c2d0278ff08f68d18a2236781e726ad7 பக்கத்தை 
அணுகவும்.

இரண்டு நாள் நெடுகே நடைபெற்ற இந்நிகழ்வு தன்மொழியாக்கம் - உருவாக்கம் என
இரு வகைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. அவ்வமர்வுகளில்
பகிர்ந்துகொள்ளப்பட்ட விவரங்கள் சிறு
குறிப்புகளாக http://www.indlinux.org/wiki/index.php/Development_track ,
http://www.indlinux.org/wiki/index.php/Localisation_track பக்கங்களில்
கிடைக்கப்பெறுகின்றன.

(1) - http://indlinux.org

--

ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam mailing list