[உபுண்டு_தமிழ்]கடந்த வார கூட்டம் - உரையாடல்

Elanjelian Venugopal tamiliam at gmail.com
Sat Mar 21 09:33:14 GMT 2009


2009/3/21 amachu <amachu at ubuntu.com>:

> விசாரித்துப் பார்க்கராம். அவற்றை இறக்குதற்குரிய முகவரி?

http://www.tunerfc.tn.nic.in/MacOSx/Fonts.zip

> ஓபன் ஆபீஸ் நிலவரம் - புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.

OOo 3.1ல் பல்லாயிரக்கணக்கான சரங்கள் தமிழாக்கப்பட்டதை நான் அறிவேன்.
ஆனால் அதன் தமிழாக்கம் வழு நிறைந்துள்ளது. இன்றுகூட நூற்றுக்கும்
மேற்பட்ட ஓஓஓ சரங்களைப் பார்வையிட்டு அவற்றிலுள்ள வழுக்கள அகற்றினேன்.

தற்போது உபுண்டுவில் OOo 2.4.1 தான் இயல்பாக ஏற்றப்பட்டுள்ளது. அடுத்த
வெளியீட்டில் OOo 3.1 ஏற்றப்படும் வாய்ப்பு உள்ளதா?

> மேலும் சொற்கள் பொதுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

மிகச் சிறந்த முயற்சி.

> நிறைய பேர் இன்னும் தேவைப்படுகிறார்கள்.

இதற்கு மக்கள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் உதவியை
நாடியிருக்கின்றீர்களா? மக்கள் தொலைக்காட்சி கணினி தொடர்பான சில
நிகழ்ச்சிகளைப் படைத்து வருகின்றனர். இருப்பினும் கட்டற்ற மென்பொருள்
தொட்டு அவர்கள் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர்களிடன் கட்டற்ற
மென்பொருளின் முக்கியத்துவம் குறித்து பேசி, அதற்காக ஒரு சிறப்பு
நிகழ்ச்சி செய்யச் சொல்லலாமே!

நட்புடன்,
வே.இளஞ்செழியன்
கோலாலம்பூர்


More information about the Ubuntu-l10n-tam mailing list