[உபுண்டு_தமிழ்]திருக்கோணமலையில் FOSS கருத்தரங்கு.

amachu amachu at ubuntu.com
Mon Mar 16 17:55:15 GMT 2009


On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:

> 2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள்
> இடம்பெறலாம் என்ற ஆலோசனை.
> 

துரதிருஷ்டவசமாக http://ubuntu-tam.org/avanam அடைவு பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ளும் போது அழிக்கப்பட்டுவிட்டது.

அதில் இருந்த ஆவணங்கள் வேறொரு கணினியில் காத்து வைத்துள்ளதாக நினைவு. நாளை
மீட்டுத் தர முயற்சிக்கின்றேன்.

> 3. அங்கே வருபவர்களுக்கு தமிழ் வசதிகள் பொதியப்பட்டு மீளக்கட்டப்பட்ட
> உபுண்டு வழங்கல் ஒன்றை வழங்க எண்ணியுள்ளேன். என்னென்ன வசதிகள்
> சேர்க்கப்படலாம்? எவற்றை நீக்கலாம்?

இதன் பொருட்டு உபுண்டு தன்மயமாக்கக் கருவி (uck.sourceforge.net)
பயன்படுத்தப்பட்டது. வழங்கலின் முதல் மொழியே தமிழ் மொழியாகக்
கொள்ளப்பட்டது. ஆக தமிழுக்குண்டான பொதிகள் இயல்பாகவே
சேர்க்கப்பட்டுவிடும். scim-m17n, ttf-tamil-fonts உள்ளிட்ட பொதிகள்
சேர்க்கப்படுகின்றனவா என சோதித்தறியவும்.

எம் பி 3, பிளாஷ் உள்ளிட்டவற்றை செயற்படுத்திட வேண்டி, இத்தகையதைத்
தொகுத்து  தொகுத்து உபுண்டு வழங்கும் ubuntu-restricted-extras, VLC இயக்கி
போன்ற பொதிகள் சேர்க்கப்பட்டன. gwget, gftp (அ) filezilla போன்ற பொதிகளும்
சேர்க்கப்பட்டன.

வைனும் சேர்க்கப்பட்டது. இன்க்ஸ்கேப், ஸ்கரைபஸ் பிளென்டர் போன்றவையும்
சேர்க்கப்பட்டதாக நினைவு. எல்லாம் சேர்த்து 870 MB அளவிற்கு வந்தது.

தாங்கள் வைன் சேர்ப்பதோடு Wine-Doors(1) ஐயும் சேர்த்து விடுங்கள். அது
மயக்கத்தில் இருந்து மீட்க பேருதவியாய்
இருக்கும் ;-) winetricks(2) என்றொன்று இருக்கிறது. அது முனைய
வழி. wine-doors சேர்ப்பதை பரிசீலிக்கவும்.  குநோமுக்கானது. நிறுவியதும்
சிக்குன்னு Applications இழுதி(drop down menu)யில் உட்கார்ந்து கொள்ளும்.

(1) http://wddb.wine-doors.org/
(2) http://wiki.winehq.org/winetricks

மற்றபடி நிரலாக்கம் தேவைப்படுமென்றால் அதற்குண்டான பொதிகளை தேர்வு செய்து
கொள்ளுங்கள். சில நண்பர்கள் remastersys பயன்படுத்துவது பற்றி
கேள்விப்பட்டதுண்டு. நான் பயன்படுத்திப்பார்த்ததில்லை. வசதியாயின்
பயன்படுத்திப்பாருங்கள்.

வேறேதும் தோன்றினால் எழுதுகிறேன்.

--

ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 197 bytes
Desc: This is a digitally signed message part
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090316/131f6266/attachment.pgp 


More information about the Ubuntu-l10n-tam mailing list