[உபுண்டு_தமிழ்]திருக்கோணமலையில் FOSS கருத்தரங்கு.

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Thu Mar 12 06:33:35 GMT 2009


தோழர்களுக்கு,

இலங்கையில் திருக்கோணமலையில் எதிர்வரும் மார்ச் 29 ஞாயிற்றுக்கிழமை கட்டற்ற
திறந்த மூல மென்பொருட்கள் தொடர்பான கருத்தரங்கொன்று லியோ கழகத்துடன் இணைந்து
நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

தகவலுக்காக இச்செய்தியினை அறியத்தருகிறேன்.

 குழுமத்திடமிருந்து சில உதவிகளை எதிர்பார்க்கிறேன்.

1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே உபுண்டு
குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி நிரல்க்ளுக்கான
தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை சேர்த்துக்கொள்ள முடியும்.

2. வருகின்ற மாணவர்களுக்கு கொடுக்கும் கையேட்டில் என்னென்ன அம்சங்கள்
இடம்பெறலாம் என்ற ஆலோசனை.

3. அங்கே வருபவர்களுக்கு தமிழ் வசதிகள் பொதியப்பட்டு மீளக்கட்டப்பட்ட உபுண்டு
வழங்கல் ஒன்றை வழங்க எண்ணியுள்ளேன். என்னென்ன வசதிகள் சேர்க்கப்படலாம்? எவற்றை
நீக்கலாம்?


தோழமையுடன்

மு. மயூரன்mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090312/eda5c604/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list