[உபுண்டு_தமிழ்]PageMaker doesn't support Tamil99
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Sat Jul 18 05:51:29 BST 2009
2009/7/18 thiru ramakrishnan <thiru.ramakrishnan at gmail.com>
> நான் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பும் கோப்புகளை பேஜ்மேக்கரில்
> பார்க்கமுடிவதில்லை. அதனால் அவற்றைப் பெறுவோர் மீண்டும்
> தட்டச்சு செய்யவேண்டியுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோசில்
> மைக்ரோசாஃப்ட் வேர்ட்-ஐப் பயன்படுத்தி அந்தக் கோப்புகளை
> மாற்ற முடிகிறது. ஆனால், வின்டோஸ் மற்றும் ஊபூன்ட்டு இடையே
> நிகழும் எழுத்துரு வேறுபாட்டால் நிறைய நேரம் வீணாகிறது.
>
உலகம் யூனிக்கோடுக்கு மாறி எத்தனையோ நாளாகிறது. பழைய திஸ்கி முதலியவற்றை
மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒரு நிரல் யூனிகோடை அனுமதிக்கவில்லை எனில் அது அதன்
குறைபாட்டையே காட்டுகிறது!
>
>
> என் ஐயங்கள்/வினாக்கள்:
> --------------------
>
> 1. தமிழ்99-இலிருந்து பிற தமிழ் வடிவங்களுக்கு மாற்றுவதற்கு
> மென்பொருள்கள் உள்ளனவா? (இல்லை, நான் தமிழ்99ஐ
> விட்டுவிட்டு ரெமிங்டன் தட்டச்சு முறையைக் கற்கவேண்டுமா?)
>
தமிழ் 99 ஒரு உள்ளீட்டு முறைதானே? அதிலேயே பயன்படுத்தலாம். இதனால் யூனிகோடை
உள்ளிட முடியாது என்று இல்லை.
>
>
> 2. ஊபூன்ட்டுவைவிட ஃபெடோரா (வைரசிடம் இருந்தும் பிற
> வகைகளிலும்) பாதுகாப்பானது என்று கேள்விப்பட்டேன். இது
> சரியா?
>
அவரவர் பயன்பாட்டை பொருத்தது. லீனக்ஸீல் வைரஸ் தாக்குதல் குறைவு. தேவையானால்
க்லாம்வைரஸ் மென்பொருளை கூடுதலாக நிறுவிக்கொள்ளலாம். கடந்த 4 வருடங்களக
உபுண்டுவையே பயன்படுத்துகிறேன்.
>
> 3. ஃபெடோராவை என் கணினியில் இறக்கினேன். அதில்
> தமிழ்99 இல்லை. அது கிடைக்குமா? (ஃபெடோரா நல்லதெனில்).
> இந்த வினாவைக் கேட்பதற்கு இது சரியான தளம் அல்லவோ?!
>
தரவிறக்கி நிறுவுங்கள். தமிழ்99 சிம் இல் பொதுதான். (scim) கூடுதல் மொழி
நிறுவலில் தமிழை நிறுவினாலும் கூட போதும்.
திவா
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090718/c4780853/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list