[உபுண்டு_தமிழ்]இணையத்தில் இணைவோம்
பத்மநாதன்
indianathann at gmail.com
Fri Feb 20 08:46:10 GMT 2009
தோழர்களே,
உபுண்டு தமிழ் குழுமத்தில் முன்பே பல திட்டங்களை செயல்படுத்த பல விவாதங்கள்
நிகழ்த்தப்பட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இத்திட்டங்களைப்பற்றி மேற்கொண்டு
விவாதிக்கப்படவில்லை. மேலும், திட்டங்கனின் நிலைகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய
கருத்துக்களை பரிமாறவும் இல்லை.
கூர்ந்த ஆய்வுக்குப்பின், தொடர்ந்த விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றமே நமது
செயல்பாடுகளை நெறிப்படுத்தும் என அறியவருகிறது. எனவெ எதிர்வரும் ஞாயிறு முதல்
ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை இனையத்தில் (
www.freenode.net) #ubuntu-tam என்ற
அறையில் விவாதம் நடைபெறும். இதில் உபுண்டு மற்றும் உபுண்டு தமிழ் குழுமம்
பற்றிய அனைத்து தலைப்புகளும் இடம்பெறும்.
தலைப்புகள் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும். இதனை திரு. அருண் மற்றும்
திரு. பத்மநாதன்
ஆகியோர் நடத்துவர்.
குறிப்பு :
1.
அறையில் நுழைய கடவுசொல் தேவையில்லை.
2.
X-Chat IRC Client எனும் பொதி நிறுவப்பட்டிருத்தல் அவசியம்.
3.
தமிழ் மற்றும் ஆங்கிலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் விவாதிக்கலாம்.
4.
தமிழில் துவக்க கையேடினை உருவாக்க, உபுண்டு கைபிடி தோழர்கள் கலந்து கொள்வது
அவசியமாகிறது.
5.
இதனைப்பற்றிய கருத்துக்களையும் விவாதிக்கலாம்.
ந. பத்மநாதன்
பொள்ளாச்சி.
--
Padhu,
Pollachi.
Knowledge is power !
"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090220/bb205eb9/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list