[உபுண்டு_தமிழ்]Jaunty Series
amachu
amachu at ubuntu.com
Sun Feb 1 17:56:02 GMT 2009
On Sun, 2009-02-01 at 23:42 +0800, Elanjelian Venugopal wrote:
> வணக்கம்.
>
> இன்னும் மூன்று மாதங்களில் அடுத்த உபுண்டு வெளியீடு வெளிவரவுள்ளது.
> அதனைத் தமிழாக்கும் பணிகள் எந்த அளவிற்க்குச் சென்று கொண்டிருக்கின்றன?
> சில நாள்களுக்கு முன்னர் நான் சில வார்த்தைகளை மொழிபெயர்த்தேன். ஆனால்,
> இதுவரை எதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை...
வணக்கம் இளஞ்செழியன். உபுண்டுவில் பிரதான அங்கம் வகிக்கும் குநோம் டெபியன்
நிறுவி ஆகிய இரண்டையும் அதன் மேலிடத்திலேயே செய்யும் பொறுப்பை வாசுதேவன்
வகிக்கிறார். தாங்கள் லாஞ்சுபேடில் மொழிபெயர்ப்பு செய்திருந்தால் தவிர்த்து
வாசுதேவன் அவர்களுக்கு பிழைகளை சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளில்
ஒத்துழைக்கலாம்.
ஆவணமாக்கம் இன்னும் தீண்டப்படாமலே இருக்கிறது. ஓபன் ஆபீஸ் பயர்பாக்ஸ்
ஆகியவற்றின் மொழிபெயர்ப்பில் உதவிட விரும்பினால் முகுந்த் தங்களுக்கு
வழிகாட்டக் கூடும்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-l10n-tam
mailing list