[உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்

ஆமாச்ச ஆமாச்ச
Mon Dec 21 03:14:32 GMT 2009


On Sun, 2009-12-20 at 08:53 +0530, ஆமாச்சு|amachu wrote:
> இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.
> 
> விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 
> 
விவாதங்களின் சாராம்சம்:

1) யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட
பணியாக மென்பொருள்கள் சில உருவாக்கும் திட்டம் உள்ளது. தட்டச்சுப் பயிற்சி,
எழுத்துக் குறியீடு மாற்றி போன்றவை அவற்றுள் அடங்கும். அறக்கட்டளை பதிவு
செய்யப்பட்டதற்கான அத்தாட்சி ஆவணம் இன்னும் பெறப்படவில்லை. பெற்றுக்
கொண்டதும் வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2)FUEL நிகழ்வு நடைபெற்றது. அது சமயம் சேர்க்கப்பட்ட சொற்களின்
பட்டியல் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil முகவரியில்
கிடைக்கப்பெறுகின்றன. 

3) கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இதுவரை 155 விண்ணப்பங்களுக்கு வட்டுக்கள்
அனுப்பப்பட்டுள்ளன. அவற்றும் 38 விபிபி விண்ணப்பங்கள் ஆகும். இதனை இன்னும்
முறைப்படுத்த வேண்டும். விண்ணப்பிப்போருக்கு பொதுவாக உபுண்டுத் தமிழ்க்
குழுமம் தொடர்பான மடல் அனுப்பப்பட வேண்டும். இதனை பத்மநாதன் வடிவமைப்பார்.

4) உபுண்டுவின் கடந்த இரு வெளியீடுகளாகவே நாம் நமக்கென்ற பிரத்யேக வட்டு
வடிவமைப்பதில் ஈடுபட்டு பரிசோதித்து வருகிறோம். இப்பணியை கனகராஜ்
நல்லமுறையில் செய்து வருகிறார். இதன் வளர்ச்சியாக நாம் வடிவமைக்கும்
வட்டிற்கென்று தனிப்பட்ட தோற்றப்பின்னணிகள் போன்றவை உருவாக்க வேண்டும்.
தங்கமணி அருண & கனகராஜ் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துவர்.

விவாதப்பதிவு: http://logs.ubuntu-eu.org/freenode/2009/12/20/%
23ubuntu-tam.html

--

ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list