[உபுண்டு_தமிழ்]முக்திக்கு முக்தி - விடுதலையை உணர்வோம் - கும்பகோணம்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Sep 29 07:46:52 BST 2008


வணக்கம்,

வாழ்வின் முக்திக்கு வழிகாட்டும் குடந்தை மாநகருக்கு மென்பொருள்
முக்திக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆம். கட்டற்ற திறந்த மூல மென்
வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு லினக்ஸ் பயனர் குழுவும் இணைந்து
செப் 27, 28 தேதிகளில் "விடுதலையை உணர்வோம்" என்ற தலைப்பில் இரண்டு நாள்
கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்பினை, தஞ்சை சண்முகா பல்கலைக்கழகத்தின்
ஸ்ரீவாஸ இராமானுஜ மையம், கும்பகோணத்தில் நடத்தின.

பல்கலைக் கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர்.
மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் கொள்கை துவங்கி குனு லினக்ஸ் இயங்கு
தளம் நிறுவும் முறை (உபுண்டு), பொதிகள் பராமரிப்பு, சி, சி++, பேர்ல்,
பைதான் நிரல்களை ஒடுக்கி இயக்கும் வழிமுறைகள், கிளேட், எரிக் உள்ளிட்ட
உருவாக்கக் கருவிகள் அறிமுகம், குனு/ லினக்ஸ்+அபாச்சி+மை எஸ் க்யூ
எல்+பிஎச்பி அறிமுகம், ரூபி ஆன் ரெயில்ஸ் அறிமுகம், சப்வர்ஷன் அறிமுகம்,
பயனர் குழுக்கள் இயங்கும் விதம் உள்ளிட்ட பல விடயங்களில் செய்முறையோடு
கூடிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீநிவாஸ இராமனுஜ மையத்தின் கட்டற்ற திறந்த
மூல மென்பொருள் குழுமம் துவக்கப்பட்டது. இதன் மூலம் குடந்தை மற்றும் அதன்
சுற்று வட்டாரப் பகுதிகளில் குனு லினக்ஸ் விழிப்புணர்வினை வருங்காலத்தில்
ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம்
கொள்ளப்பட்டது. நிகழச்சிக்கான விரிவான ஏற்பாட்டினை மையத்தின் கணினித்
துறைத் தலைவர் ஹரிபிரசாத் செய்திருந்தார். இராமதாசும் பாஸ்கரும்
இவ்விரண்டு நாள் நிகழ்ச்சினை ஒன்றிணைந்து நடத்தினர்.

--
ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list