[உபுண்டு_தமிழ்]மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Sep 10 03:15:29 BST 2008


2008/9/10 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
> நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள். பயிற்சி வகுப்புக்க்காக
> பயன்படுத்தப்படும் கையேடுகள் போன்ற ஆவணங்களை வலைத்தளத்தில்
> வெளியிடுவீர்களா?
>

இது தொடர்பாக ஹிரன் அளிக்கவிருக்கும் ஆவணங்களை அவசியம் தர முயற்சிக்கிறோம்.

> புதியனவைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் ஏற்கனவே கட்டற்ற உரிமத்துடன்
> உள்ளவைகளில் தேவைப்படுகின்ற இடங்களில் மேம்பாட்டுக்கள் செய்யவும்
> முயற்சிக்கும் படி வேண்டுகிறேன்.
>

ஆம். செய்ய வேண்டும்.


> எனக்குத்தெரிந்த சில வழுக்கள்:
>
> உமர் அவர்கள் ஆக்கிய தென்றல்யூனி (ThendralUni.ttf  :
> http://www.geocities.com/csd_one/fonts/ThendralUni.zip ) பாவிக்கையில்
> "ஓ" சற்று கீழிறங்கித் தென்படும்.  "ஒ" க்கும் "ஔ" க்கும் இடையே "ஓ' வை
> ஒப்பிடின் அது புலப்படும்.
> http://salrc.uchicago.edu/resources/fonts/available/tamil/thendral.shtml
> பக்கத்தில் பார்க்கலாம்.
>
> அத்துடன் லினக்ஸில் font-size குறைவாக்கினால் "ஓ" வின் கீழ் சுழி அவ்வளவு
> தெரியாமல் "ஒ" மாதிரியே தெரிகிறது.
>
> மேலும் ஆங்கில எழுத்து p உம்  சற்று கீழிறங்கி வருகிறது. இவற்றை
> திருத்துவது எவ்வாறு என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
>

இதனை ஐயமாக கேட்டு இதற்குண்டான பதிலை நிகழ்விற்கு பிறகு அறியத் தருகிறேன்.


-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list