[உபுண்டு_தமிழ்]மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு..

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Wed Sep 10 03:04:08 BST 2008


ஆமாச்சு,

நல்லதொரு முயற்சி. பாராட்டுக்கள். பயிற்சி வகுப்புக்க்காக
பயன்படுத்தப்படும் கையேடுகள் போன்ற ஆவணங்களை வலைத்தளத்தில்
வெளியிடுவீர்களா?

புதியனவைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் ஏற்கனவே கட்டற்ற உரிமத்துடன்
உள்ளவைகளில் தேவைப்படுகின்ற இடங்களில் மேம்பாட்டுக்கள் செய்யவும்
முயற்சிக்கும் படி வேண்டுகிறேன்.

எனக்குத்தெரிந்த சில வழுக்கள்:

உமர் அவர்கள் ஆக்கிய தென்றல்யூனி (ThendralUni.ttf  :
http://www.geocities.com/csd_one/fonts/ThendralUni.zip ) பாவிக்கையில்
"ஓ" சற்று கீழிறங்கித் தென்படும்.  "ஒ" க்கும் "ஔ" க்கும் இடையே "ஓ' வை
ஒப்பிடின் அது புலப்படும்.
http://salrc.uchicago.edu/resources/fonts/available/tamil/thendral.shtml
பக்கத்தில் பார்க்கலாம்.

அத்துடன் லினக்ஸில் font-size குறைவாக்கினால் "ஓ" வின் கீழ் சுழி அவ்வளவு
தெரியாமல் "ஒ" மாதிரியே தெரிகிறது.

மேலும் ஆங்கில எழுத்து p உம்  சற்று கீழிறங்கி வருகிறது. இவற்றை
திருத்துவது எவ்வாறு என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

~சேது



2008/9/8 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> வணக்கம்
>
> டெபியன் உள்ளிட்ட குனு லினக்ஸ் வழங்கல்களில் முறையாக கட்டற்ற உரிமம்
> பெற்ற தமிழ் மின்னெழுத்துக்களின் எண்ணிக்கை குறைவு.
>
> இதனைக் கருத்தில் கொண்டும், கட்டற்ற மென்பொருட் கருவிகளைக் கொண்டு
> மின்னெழுத்துக்களை உருவாக்கவும், வரும் சனி ஞாயிறு (13, 14 செப்டம்பர்)
> ஆகிய இரு தினங்களில் 'மின்னெழுத்து உருவாக்க பயிற்சி வகுப்பு' ஒன்றை
> நடத்த உள்ளோம்.
>
> இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் இரண்டு.
>
> 1) அடுத்த ஆறுமாதங்களில் முறையாக கட்டற்ற உரிமம் பெற்ற சில மின்
> எழுத்துக்களை உருவாக்கி டெபியன்/ உபுண்டு போன்ற பிரபல குனு லினக்ஸ்
> வழங்கல்களின் மென் களஞ்சியங்களில் சேர்ப்பது.
>
> 2) கட்டற்ற கருவிகள் கொண்டு மின்னெழுத்துக்கள் உருவாக்கும் முறையை
> கையேடாக கொண்டு வருதல்.
>
> இந்நோக்கங்களில் எங்களுக்கு துணை புரிய விழைவோரை இந்நிகழ்வில் பங்கு
> கொள்ள அழைக்கிறோம். அழகிய தமிழ் மின்னெழுத்துக்கள் படைக்க
> ஆர்வமிருப்போரும் கலந்து கொண்டு பலனடையலாம். இந்நாட்களில் நமக்காக
> பாடங்களை எடுக்க சுதந்தர மலையாளக் கணிமையின் ஹிரன் வேணுபோபாலன்
> இசைந்துள்ளார்.
>
> சென்னை, குரோம்பேட்டை, எம் ஐ டி, வளாகத்தில் உள்ள என். ஆர். சி. பாஸில்
> வகுப்புகள் நடைபெறும். முன்பதிய shriramadhas at gmail.com முகவரிக்கு
> தங்களைப் பற்றிய விவரங்களுடன் மடல் அனுப்பவும்.
>
> பி.கு: பிற மொழி மின்னெழுத்துக்கள் படைக்க ஆர்வமிருப்போரும் கலந்து கொள்ளலாம்.
>
> --
> ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>


More information about the Ubuntu-l10n-tam mailing list