[உபுண்டு_தமிழ்]ஈரோட்டில் இன்டிரிபிட் ஐபக்ஸ் அறிமுக நிகழ்ச்சி

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Oct 29 11:47:10 GMT 2008


வணக்கம்,

நாளை வெளிவர இருக்கின்ற உபுண்டு இன்ட்ரிபிட் ஐபக்ஸினை ஈரோட்டிரிலிருந்து
வெளியிட ஈரோடு ஐ டி அஸோசியேஷன்  முன்வந்துள்ளது.

அதன்படி ஈரோட்டில் இன்டிரிபிட் ஐபக்சுக்கான அறிமுக நிகழ்ச்சி, நவம்பர்
ஒன்பதாம் தேதி ஏற்பாடாகியுள்ளது. ஒரு நாள் நடைபெற இருக்கும்
இந்நிகழ்ச்சியில் இன்ட்ரிபிட் ஐபக்ஸ் கொண்டு - உபுண்டு குனு லினக்ஸ்
பங்கு பெறுவோருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படும்.

இதன் பொருட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ள ஈரோடு ஐடி அசோசியஏஷனின் அலோசகர்
திரு. இராஜா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.

விரிவான விவரங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list