[உபுண்டு_தமிழ்]இந்திரிபிட் ஐபக்ஸ் - பீடா சோதனை

"கா. சேது | K. Sethu" skhome at gmail.com
Wed Oct 15 03:17:35 BST 2008


-------- Original Message --------
Subject: [உபுண்டு_தமிழ்]இந்திரிபிட் ஐபக்ஸ் - பீடா சோதனை
From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
Date: Sun Oct 12 2008 21:18:21 GMT+0530 (IST)
> வணக்கம்,
>
> இந்திரிபிட் ஐபக்ஸ் பீடா யாராவது சோதித்துப் பார்த்தீர்களா? அதன்
> அடிப்படையிலேயே பயனரின் பார்வையில் புத்தகம் அமைக்க திட்டம்.
>

நான் பல வாரங்கள் முன் அல்பா-3 நிறுவலில் இல் தொடங்கி அதன் பின் வந்த எல்லா 
மேம்பாடுகளையும் சேர்த்து தற்போது பீட்டா (இன்று வரையான) மேம்பாடுகளுடன் சோதித்து 
வருகிறேன்.
 
முதலில் எழுத்துப்பெயர்த்தல் பற்றி:
 
Intrepid = இன்ரெபிட் அல்லது இன்ட்ரெபிட் அல்லது இந்தெரபிட் எழுத்துப்பெயர்ப்புகளில் 
ஒன்றாக இருக்கலாம் என நினைக்கிறேன். trepid போன்ற வார்த்தைகளில் "tre" ஈற்றில் உள்ள 
உயிர் ஒலி இகரமாக பலுக்கப்படுவதில்லை மாறாக கூடுதலாக அதில் எகரம் அண்மித்தே 
இருப்பதாகக் கருதுகிறேன். ர வுக்குப்பதில் ற வாக இருக்க வேண்டுமா என்பது என் மனதில் 
உள்ள இன்னொரு வினா. 

Ibex = ஐபெக்ஸ் என்றிருக்கலாம். 
 
ஈற்றில் மெய் வரா என்ற விதியை கடைபிடிப்பதாயின் "பிட்" => "பிட்டு" , "க்ஸ்" => "க்சு" 
என மாற்ற வேண்டும்.

எனினும் எழுத்துபெயர்ப்பு / தமிழாக்கம் சரியாக இருக்கவேண்டும் என்பது அவ்வளவு 
முக்கியமல்ல . வெளியீட்டை உபுண்டு - 8.10 - பீட்டா என்றே கூடுதலாக அழைத்துக்கொள்ளலாம் 
தானே? பார்க்க : http://www.ubuntu.com/ மற்றும் 
http://www.ubuntu.com/testing/intrepid/beta  பக்கங்களில் Ubuntu 8. 10 
என்றுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
 
அடுத்து உபுண்டு, குபுண்டு மற்றும் சுபுண்டு 8.10 அல்பா வெளியீட்டுக்களில் இருந்த ஒரு 
பாரதூரமான வழு, மற்றும் பீட்டா வெளியீட்டில் உள்ள அதற்கான தற்காலிக வழு தவிர்க்கும் 
பாதுகாப்பு நடவடிக்கை, தற்போதைய நிலவரங்கள் பற்றி தாங்கள் யாவரும் அறிந்திருத்தல் நன்று.
 
http://www.ubuntu.com/testing/intrepid/beta#Known%20Issues என்ற பக்கத்தைப் 
பார்க்கவும். அதில் முதலாவதாகச் சுட்டிக்காட்டப்படும் பிரச்சினைதனான் அவ்வழுவினால் ஏற்பட்டது :
 
> A problem that could result in corruption of the firmware on Intel 
> GigE ethernet hardware has led to the disabling of the e1000e driver 
> in the Linux kernel included in Ubuntu 8.10 Beta. Ethernet devices 
> that use this driver cannot be used with Ubuntu 8.10 Beta; support for 
> this hardware will be re-enabled in daily builds immediately after 
> Beta and this issue will be resolved for the Ubuntu 8.10 final 
> release. https://bugs.launchpad.net/bugs/263555
> 

மேற்கூறிய அவ்வழு (26355) அறிக்கை பக்கம் சென்று பாருங்கள். e1000e இயக்கி பாவிக்கும் 
இன்டெலின் Ethernet வன்பொருட்கள் சில கணினிகளில் (முக்கியமாக மடிக்கணினிகளில்) 
பாவிக்கவியலா அளவிற்கு 8.10 அல்பாக்களில் இருந்த அவ்வழுவினால் பாதிக்கப்பட்டிருதமை 
பற்றிய தகவற்கள் அங்கு காணலாம். மற்றும் இவ் வழுப் பிரச்சினைக் காரணமாக உபுண்டு 
வெளியீட்டாளர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் பல காரசார விவாதங்கள் அங்கு காணலாம். 
 
சுருக்காமாக பட்டியலிடுவதாயின்:
 
1). 2008 ஆகஸ்ட் முதல் செப்டெம்பர் 24 முன் வெளியிடப்பட்டு வந்த (லினக்ஸ் kernel 
2.6.27-4.6 க்கு முன்னர் வந்த) 2.6.27 வரிசை kernal rc வெளியீடுகள் சில இன்டெல் 
பிணைய வன்பொருட் பாகங்கள் (network parts) பாவிக்கும் NVRAM ஐ மாசுபடுத்தக்கூடிய 
வழுவை கொண்டிருந்தன. அப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவை e1000e இயக்கி (driver) 
பயன்படுத்தும் ich8 மற்றும் ich9 பாலவமைப்பினாலான இன்டெல் வன்பொருள் பாகங்கள் உள்ள 
கணினிகள். முக்கியமாக பல சமீபகால மடிக்கணினிகள். பாதிப்பின் பாரதூர தாக்கம் என்னவெனின் 
சிலரின் கணினிகளில், பிணையம் தொடர்பான வன்பொருட்கள் எந்த இயங்குத்தளத்திலும் முற்றாகப் 
பாவிக்கியலா வண்ணம் பழுதானதாகும்! 
 
2) செப்டெம்பர் 24 இல் வெளிவந்த 8.10 அல்பா (kernel 2.6.27-4.6) முதல் பின்னர் 
ஒக்டோபர் 2 வாக்கில் வெளிவந்த பீட்டா மற்றும் அதன் பின்னர் சில நாட்கள் வரை வெளிவந்த 
தினசரி ஆக்கங்கள் (Daily Builds) ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட வன்பொருட்களின் 
பாதுகாப்புக்காக இன்டெல் e1000e இயக்கி பயன்படுத்தும் கணினிகளில் பிணைய அமைப்பை 
செயலிழக்கச் செய்யும் தற்காலிக நடவடிக்கை உள்ளடக்கினர். அதானது அவ்வெளியீடுகளில் ஒன்றை 
நிறுவப்படும் கணினியில் இன்டெல் e1000e இயக்கி பாவிக்கும் வன்பொருள் இருப்பின் அது 
பழுதைடையா வண்ணம் அவ்வியங்குத்தளத்தில் மட்டும் பிணைய / இணைய தொடர்புகள் இயங்காமல் 
இருக்கும் நடவடிக்கை. அதே e1000e இருக்கும் கணினிகளில் பழைய வழுவற்ற kernel உள்ள 
வேறு லினக்ஸ் மற்றும் விண்டோ இயங்குதளங்களில் பிணைய / இணைய தொடர்புகள் பிரச்சினைகள் 
இல்லாமல் இயங்கும. அதாவது வன்பொருள் பழுதாகும் சாத்தியக்கூறுகளை முற்றாக அகற்றவே அந் 
நடவடிக்கை. 
 
3) பின்னர் ஒக் 7 வெளியிடப்பட்ட 20081007 தினசரி ஆக்கத்திலிருந்து வழு முழுவதும் 
களையப்பட்ட kernel தான் உள்ளடக்கப்படுவதாக வழு அறிக்கை பக்கத்தில் ஒரு மடலில் 
https://bugs.launchpad.net/ubuntu/+source/linux/+bug/263555/comments/166  
கூறப்பட்டுள்ளது. ஆயினும் அதன் பின்னரரும் தங்கள் e1000e இயக்கி உள்ள கணினிகளில் வழு 
அகற்றப்பட்ட நிறுவலில் இருந்து வலைத்தொடர்புகளை ஏற்படுத்த இயலாதுள்ளதாக மூவர் 
அப்பக்கத்தில் அறிவித்துள்ளனர். (அவற்றிற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்).

4) தற்போது உபுண்டு 8.10 - பீட்டா 
(http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா 
(https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி 
சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய அமைப்புக்கான இயக்கி 
(ethernet driver) என்னவென கண்டறியுங்கள். 

எந்த இயக்கி பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய முதலில் பயன்படுத்தப்படும் 
இடைமுகப்புக்களின் வன்பொருள் முகவரிக்களை ("HWaddr" of Network interfaces) 
கண்டறிய பின்வரும் கட்டளையை ஒரு முனையத்தில் கொடுக்கவும்.

    ifconfig |grep HWaddr

காட்டாக எனது intel-D945GNT motherboard உள்ள கணினியில் உள்ள ஒரே இடைமுகப்பிற்கு 
வரும் மறுமொழி பின்வருமாறு:

    eth0   Link encap:Ethernet HWaddr 00:19:d1:13:26:ba

ஒன்றுக்கு மேற்பட்ட இடைமுகப்புக்கள் இருப்பின் (மேலதிக PCI அட்டைகளாக ) அவற்றிற்கான 
HWaddr களும் மேற்காட்டியது போல eth1, eth2, ... என்ற வரிகளில் வரும். (eth0, 
eth1,.. என்பன logical names எனப்படும்)

அடுத்து முனையத்தில் பின்வரும் கட்டளை கொடுங்கள் :

    sudo lshw -C net

தங்கள் பயனர்க்கணக்கிற்கான கடவுச்சொல் கேட்பின் கொடுத்தபின் வரும் மறுமொழி வரிகளில் ஒவ்வோர் 
இடைமுகப்புக்கான விவரங்கள் இருக்கும். மேலே நாம் கண்ட "HWaddr" என்பது இங்கு "serial" 
என இருக்கும். அதற்கான விவரங்களில் "product:" என்பதற்கு தெரிவிக்கப்படுவது எந்த 
இயக்கி பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி. 

  காட்டாக எனது கணினியில் இக்கட்டளை இடுகையில் வரும் முழுப்பதில் பின்வருமாறு:

  sethu at IntrepidAlpha-sethu-desktop:~$ sudo lshw -C net
  [sudo] password for sethu:
   *-network       
      description: Ethernet interface
      product: 82801G (ICH7 Family) LAN Controller
      vendor: Intel Corporation
      physical id: 8
      bus info: pci at 0000:04:08.0
      logical name: eth0
      version: 01
      serial: 00:19:d1:13:26:ba
      size: 100MB/s
      capacity: 100MB/s
      width: 32 bits
      clock: 33MHz
      capabilities: pm bus_master cap_list ethernet physical tp mii 
10bt 10bt-fd 100bt 100bt-fd autonegotiation
      configuration: autonegotiation=on broadcast=yes driver=e100 
driverversion=3.5.23-k4-NAPI duplex=full firmware=N/A ip=192.168.0.2 
latency=32 link=yes maxlatency=56 mingnt=8 module=e100 multicast=yes 
port=MII speed=100MB/s
   *-network DISABLED
      description: Ethernet interface
      physical id: 1
      logical name: pan0
      serial: d2:2b:82:44:f1:a0
      capabilities: ethernet physical
      configuration: broadcast=yes driver=bridge driverversion=2.3 
firmware=N/A link=yes multicast=yes
   
மேற்காட்டியதில் எனது கணினியின் பிணையதிற்கான ஒரே வன்பொருள் இடைமுகப்பு eth0 
பாவிக்கும் இயக்கி "82801G (ICH7 Family) LAN Controller" என அறிகிறோம். (அது 
இந்த வழுவினால் பாதிப்படையாதது)

தங்கள் கணினியில் எந்தவொரு பிணைய வன்பொருள் இடைமுகப்புக்கும் ICH8 அல்லது ICH9 குடும்ப 
e1000e இயக்கி பயன்படுத்தப்படுவதாயின் பீட்டா வெளியீட்டை பதிவிறக்கி நிறுவாமல் பின்வரும் 
மாற்று நடவடிக்கைளில் ஒன்றைச் செய்யுங்கள் எனப் பரிந்துரைக்கிறேன்:

i) காத்திருந்து இம்மாதக் கடைசியில் வரவுள்ள இறுதி வெளியீட்டை நிறுவுவது .

ii) அல்லது இறுதி வெளியீடு வரும் முன் இடைக்காலத்தில் வரவுள்ள Release Candidate 
(RC) இறுவட்டை வெளிவந்தபின் பதிவிறக்கி நிறுவுவது.

iii) RC வரும் வரை முன் இப்போதே வேண்டுமெனின் கடைசியாக வந்த தினசரி ஆக்க இறுவட்டை 
பதிவிறக்கி நிறுவுவது. உபுண்டு, குபுண்டு, சுபுண்டு ஆகியனவற்றிற்கான தினசரி ஆக்க 
நிகழ்வட்டு அடங்கிய இறுவட்டுக்கள் உள்ள இடங்கள் பின்வருமாறு : 

http://cdimage.ubuntu.com/daily-live/
http://cdimage.ubuntu.com/kubuntu/daily-live/
http://cdimage.ubuntu.com/xubuntu/daily-live/

)5. இவ்வழுவின் மூல காரணி முதலில் வந்த 2.6.27-rc kernel மேம்பாடுகள். ( வழு 
அறிக்கைப பக்கம் : http://bugzilla.kernel.org/show_bug.cgi?id=11382 ) . 
பெடோரா, மாண்டிரீவா, ஜெனட்டூ லினக்ஸ், சூசே மேம்பாட்டாளர்களும் இவ்வழுவை தவிர்ப்பதற்கான 
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனத்தெரிகிறது. உபுண்டு மேம்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமை 
விமர்சனங்கள் எழக் காரணம் வன்பொருள் பாதிக்கக்கூடிய வழுவுள்ளது என அறிந்தபின்னும் அடுத்து 
வெளியிடப்பட்ட அல்பா வரும் வரையிலான இடைக்காலத்தில் வழுவுடன் வெளியிடப்பட்டிருந்த 
அல்பாவை உடனடியாக மீள்வாங்காமல் விட்டது எனத்தெரிகிறது.

தற்போது கூட http://www.kubuntu.org/ க்கு செல்லும் ஒரு புதுப்பயனர் குபுண்டு பீட்டா 
பற்றிய விளம்பரப்படுத்தும் தொடுப்பை சொடுக்கி 
http://www.kubuntu.org/news/8.10-beta வழியாக 
https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu என்ற அறிவிப்பு பக்கம் 
சென்று இறுவட்டை பதிவிறக்குகையில் எங்கும் இவ்வழு பற்றியோ ஏனைய இருக்கும் பிரச்சினைகள் 
பற்றியோ அறியாமலே இருக்கலாம். உபுண்டுவிற்கான அறிவிப்பு பக்கத்தில் ( 
http://www.ubuntu.com/testing/intrepid/beta ) "Known Issues" பக்கதிற்கு 
தொடுப்பு உண்டு. சுபுண்டு பீட்டா அறிவிக்கும் 
http://www.xubuntu.org/news/intrepid/beta பக்கதிலிருந்து "Release Notes" 
என்ற தொடுப்பு கொடுக்கும் 
https://wiki.ubuntu.com/Xubuntu/IntrepidIbex/BetaAnnouncement பக்கத்தில்  
இவ்வழு இருந்திருப்பதைப்பற்றி தெளிவாக தகவல் உள்ளது. இவ்வாறு வெவ்வேறு உபுண்டவின் 
விநியோங்களிக்கிடையே ஒருமித்த விதமாகவில்லாமல் இருப்பதும் ஒரு குறைபாடுதான்.

எந்த பயனரும் அல்பா, பீட்டா போன்ற சோதனை வெளியீடுகளை பதிவிறக்கி சோதிக்க விரும்பின், 
ஏற்கனவே இருக்கும் வழுக்கள் மற்றையப் பிரச்சினைகள் பற்றி முற்றாக அறிந்த பின்னரே 
முற்படவேண்டும். முக்கியமாக மேம்பாட்டாளர்களுக்கான மடலாற்ற குழும மடல்களை வாசிக்கவும் 
வேண்டும். சோதனை வெளியீடுகளைப் பாவிக்கையில் மென்பொருட்கள் பழுது, தரவுக்கோப்புக்கள் 
இழப்பு மற்றும் வன்பொருள் பழுது ஏற்படுவது அரிதாக இருப்பினும் அவை ஏற்பட ஒரு 
சாத்தியக்கூறும் இல்லை என யாரும் உத்தரவாதம் அளிப்பதில்லை என்பதையும் நோக்கவும். எனவே 
சோதனைகளில் ஈடுபட முன் இவற்றை கருத்தில் எடுத்து முடிவு செய்யுங்கள்.

~சேதMore information about the Ubuntu-l10n-tam mailing list