[உபுண்டு_தமிழ்]நிரலாளர்கள் வேண்டும்...

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Thu Oct 2 06:36:16 BST 2008


ஆமாச்சு,

உங்களுடைய இந்த மடல் மிக முக்கியமானது.

நாம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரவேண்டியிருப்பதை நீங்கள் நன்கு புரிந்து
வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

முகுந்த் , சுந்தர் போன்றவர்களை தொடர்புகொள்ளுங்கள்.

தமிழாவும் இத்தகைய செயற்றிட்டங்களில் ஆர்வம் காட்டுகிறது. எல்லோரையும்
இணைத்துக்கொள்ள வேண்டும். எமக்கிருக்கும் ஆள் வளம் மிகச்சொற்பமானது.

நான் பணியாற்றும் நிறுவனம் அடுத்தடுத்த மாதங்களில் தன்னார்வமாக சில திறந்த
மூலத்திட்டங்களில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

என்னாலியன்ற பங்களிப்பு இத்தகைய திட்டங்களுக்கு நிச்சயம் உண்டு.

-மு.மயூரன்

2008 அக்டோபர் 2 10:53 அன்று, ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <
amachu at ubuntu.com> எழுதியது:

> வணக்கம்,
>
> மொழிபெயர்ப்பு போன்ற காரியங்களெல்லாம் முக்கியம் எனும் அதே வேளையில் சற்றே
> தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய காரியங்களை கருத்தில் நிறுத்துகிற போது ஆற்றல்
> வாய்ந்த, முன்வந்து நேரம் கொடுக்கக் கூடிய நிரலாளர்கள் நாம் மேற்கொண்டுள்ள
> பணிகளுக்குத் தேவைப்படுகின்றனர்.
>
> எழுத்துப் பிழை திருத்தி, உரை-ஒலி மாற்றம் போன்ற பல பணிகள் மேற்கொள்ளப் பட
> வேண்டியுள்ளன. இத்திட்டங்களை கட்டற்று செயற்படுத்த தேவையான நிதி வளங்களை
> ஆராய்ந்து அதற்குண்டான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
>
> தங்களுள் அத்தகையோர் இருந்து பங்களிக்க இயலுமாயின் தெரியப்படுத்துமாறு
> கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் எந் நிரலாக்க மொழியில் சிறந்து விளங்குகிறீர்கள்,
> எவ்வகைகளில் பங்களிக்க இயலும் போன்ற விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு
> கேட்டுக் கொள்கிறேன்.
>
> --
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081002/98fbf31e/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list