[உபுண்டு_தமிழ்]இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்...

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Tue Nov 25 10:05:23 GMT 2008


2008/11/25 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>

> 2008/11/25 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>
>
>> sudo apt-get update
>> sudo apt-get install scim-m17n m17n-contrib
>>
>>
> எமது கணினியில் நிகழ் வட்டு கொண்டு முயற்சிக்கையில்,
> -----------------------
> ubuntu at ubuntu:~$ sudo apt-get install scim-m17n
> Reading package lists... Done
> Building dependency tree
> Reading state information... Done
> The following extra packages will be installed:
>   libanthy0 libgd2-xpm libm17n-0 libotf0 m17n-contrib m17n-db
> Suggested packages:
>   libgd-tools m17n-docs gawk
> The following packages will be REMOVED:
>   libgd2-noxpm
> The following NEW packages will be installed:
>   libanthy0 libgd2-xpm libm17n-0 libotf0 m17n-contrib m17n-db scim-m17n
> 0 upgraded, 7 newly installed, 1 to remove and 0 not upgraded.
> ------------------------
> சார்புடைய பொதியாகக் கருதி m17n-contrib பொதியும் கூடவே நிறுவப்படுவதை
> மேற்குறிப்பிடப்பட்டுள்ள செயற்பதிவுகள் (log) காட்டுகின்றன.
>

தங்கள் கண்டது சரியே.

ஆனால் m17n-contrib அவ்வாறு நிறுவப்படுவது  ஒரு சார்ந்த பொதி என்பதால் அல்ல.

மாறாக scim-m17n பொதி சார்ந்த libm17n-0 அத்தியாவசிய  பொதிக்கு
பரிந்துரைக்கப்பட்ட பொதிகளில் ("Recommends") ஒன்றாவதால்

scim-m17n க்கான தகவல்கள் உள்ள உபுண்டு வலைப்பக்கம்:
http://packages.ubuntu.com/intrepid/scim-m17n
( http://packages.ubuntu.com/ பக்கத்தில் தேடல் வழியாகவும்  அங்கு வரமுடியும்)

 scim-m17n சார்ந்துள்ளதில் ("Depends") ஒன்றான libm17n-0 க்கான தகவல் பக்கம்
உள்ளது :
http://packages.ubuntu.com/intrepid/libm17n-0

அங்கு m17n-contrib மற்றும் m17n-db கூட பரிந்துரைக்கப்பட்டாதாக ( "Recommends"
) பச்சை நிற குறியீட்டுன் காட்டப்பட்டுள்ளதை அவதானிக்கவும்.

முன்னயை ஹார்டியில் எப்படியெனின்
http://packages.ubuntu.com/hardy/libm17n-0

ஹார்டிக்கு universe repo விலிருந்த m17n-contrib பொதியானது "Depends",
"Recommends" "Suggests" மூன்றிலும் காட்டப்படவில்லை. m17n-db அதற்கு சார்ந்த
பொதியாக (சிவப்பு நிறத்தில்) காட்டப்பட்டுள்ளது.

சாரந்த பொதிகளும் பரிந்துரைக்கப்பட்ட பொதிகளும் உபுண்டுகளில் எல்லா
நிறுவிகளாலும் கட்டாயமாக சேர்க்கப்படுவன.

வித்தியாசம் என்னவெனில்  பரிந்துரைக்கப்பட்ட பொதிகளை அகற்ற முடியம்.
நிறுவப்பட்டுள்ள ஏனையவைகளுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் சார்ந்த பொதிகளை அகற்ற
முனைந்தால் நிறுவி அப் பொதியில் சார்ந்துள்ள ஏனைய பொதிகளையும் அகற்ற
வேண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டும்.

இந்திரெபிட்டில் libm17n-0 க்கு  m17n-contrib பரிந்துரைக்கப்பட்ட தகைமைக்கு
உயர்த்தப்பட்டுள்ளதால் நான் காட்டிய
sudo apt-get install scim-m17n m17n-contrib கட்டளைக்குப்பதில்
sudo apt-get install scim-m17n என மட்டும் கட்டளை கொடுப்பினும் நமக்குத்
தேவையானவைகள் நிறுவப்பட்டு விடும்.

Synaptic Package Manager நிறுவி வழியாக  நிறுவுகையிலும் அவ்வாறே scim-m17n யை
நாம் தேர்வு செய்வின் ஏனைய தேவையான சார்ந்த பொதிகளுடன் m17n-db, m17n-contrib
பொதிகளும் தானியக்கமாக அந்நிறுவியினாலேயே தெரிவு செய்யப்பட்டு நிறுவப்படும்.

எனது அறிந்திராமை அகல உதவிய தங்கள் சுட்டிக்காட்டலுக்கு நன்றி.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081125/f8daba2f/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list