[உபுண்டு_தமிழ்]தமிழாக்கப் பணிகளும் பங்களிப்புகளும்..

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Thu Nov 6 03:23:28 GMT 2008


வணக்கம்,

கீழ்காணும் தமிழாக்கப் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை விரைந்து
தொடர்ச்சியாக தொய்வின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இருப்பவை.

1) குநோம் தமிழாக்கம் - தொடர்பாளர் - தி வாசுதேவன் - agnihot3 AT gmail DOT com

2) கே பணிச் சூழல் தமிழாக்கம் - தொடர்பாளர் - ம ஸ்ரீ ராமதாஸ் - amachu AT
ubuntu DOT com

3) டெபியன் இன்ஸ்டாலர் தமிழாக்கம் - தொடர்பாளர் - தி வாசுதேவன் - agnihot3 AT
gmail DOT com

4) ஓபன் ஆபீசு தமிழாக்கம் - தொடர்பாளர் - முகுந்த் - mugunth AT gmail DOT com

இவற்றுள் குநோம் மற்றும் ஓபன் ஆபீசுக்கு தனி மடலாடற் குழுக்கள் உள்ளன. உபுண்டு
தமிழ் குழுமத்தின் தமிழாக்கத்திற்கான மடலாடற் குழு கேபணிச் சூழலுக்கான மடலாடற்
குழுவாகவும் திகழ்கிறது. அங்கேயே தாங்கள் பிற தமிழாக்கங்கள் குறித்தும்
அலசலாம்.

இத்தகைய திட்டங்களுக்கு வேண்டிய பொருளாதாரம் உள்ளிட்ட வளங்களின் வசதிகளை செய்து
தர தாங்கள் சார்ந்த நிறுவனங்களைக் கோரி அங்ஙனம் செய்ய வைத்து  எங்கள்
பணிகளுக்கு உரமூட்டலாம்.

தமிழ் இடைமுகப்போடு கூடிய பணிச்சூழலில் தங்கள் வேலைகளை செய்யும் போது
மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை சுட்டி உதவலாம். தாங்கள் விரும்பி பயன்படுத்தும்
பயன்பாட்டினை தமிழாக்க தாங்கள் முன்வரலாம். இம்மொழிபெயர்ப்புகள் அனைத்தும்
அதனதன் மேலிடத்தில் செய்யப்படுவதால் அனைத்து குனு/ லினக்ஸ் வழங்கல்களுக்கும்
போய்ச் சேரும் என்பது குறிப்பிடத் தக்கது.

-- 

ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081106/084e194f/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list