[உபுண்டு_தமிழ்]உபுண்டுகளில் தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் உள்ள வழுக்களும் தீர்வும்

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Nov 3 09:56:14 GMT 2008


சேது,

தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.
இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது.


// ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல்
இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு
மாறுகின்றன//

இதனை நானும் அவதானித்தேன்.

Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள்
காரணமாக ஏற்படுகிறது.

உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations
இதில் உண்டு.

இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற hinting ,
smoothing போன்றவற்றை அமைத்துக்கொள்வதற்கான நிரல் இம்முறை தபுண்டுவில்
இணைக்கப்படுகிறது.

(அந்நிரல் துண்டை மட்டும் தனித்தியங்கும்வண்ணம் மாற்றியமைத்து இத்தோடு
இணைக்கிறேன். )

//லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை அகற்றாமல்
sans/serif/monospace எழுத்துருக்களுக்கு சூரியன்டாட்காமை
விருப்பத்தேர்வாக்கத் (preferred) தேவையான தொடர்பை (sym link) ஆக்கி
மேலும் Hinting=Slight என்பதையும் பாவித்து அமைத்தபின்//

முன்பு இந்த படரல் பிரச்சினைக்கு எளிய தீர்வாக ttf-indic-fonts-core பொதியை
அகற்றிவிட்டு பயன்படுத்தினேன். ஆனால் குறிப்பாக இந்தப்பிரச்சினை லோகித் தமிழ்
இனால் தான் ஏற்படுகிறது.

மேலே சொன்னபடியான sym link உருவாக்கப்பட்டால் லோகித் தமிழ் இனை அகற்ற
வேண்டியதில்லையா?

அப்படியானால் தபுண்டுவைக்கொண்டு மேற்கண்ட symlink உருவாக்கத்தினை செய்யலாமா?

//
வலைப்பதிவிற்கு பின்னர் கொணரலாம். நான் செய்யாவிடில் நண்பர்
மயூரன்அதைச்செய்து உதவி விடுவார் :>)//

அடுத்த வேலை அதுதான் ;-)


-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081103/9837571f/attachment.htm 
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: hinting.sh
Type: application/x-sh
Size: 2287 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20081103/9837571f/attachment.sh 


More information about the Ubuntu-l10n-tam mailing list