[உபுண்டு_தமிழ்] Patch for xkb-data - Tamil99 Keyboard

Sivaraj D sivaraj at theni.net
Mon Jul 14 06:33:48 BST 2008


> xkb க்கு மாற்றங்கள் குறித்து முன்னர் நமது குழுவில் நிகழ்ந்த உரையாடல்களை
> https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-February/001348.htmlதறியில் காணலாம். தாங்கள் பரிந்துரைத்திருக்கும் தமிழ் 99 மாதிரியையும்
> சேர்த்து, இருக்கும் பிற விசைப் பலகைகட்டும் சில மாற்றங்களைச் செய்து
> பொதியாக்கி சோதனைக்காக தந்திருந்தோம்.
>

அப்பொதியில் ஏற்கனவே இருக்கும் பலகைகளில் மாற்றம் ஏதும் இருப்பதாக
தோன்றவில்லை.  மேலும் புதிய பலகைகளே இணைக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே உள்ள தமிழ்
விசைப்பலகைகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்போது, மேன்மேலும் விசைப்பலகைகளை
சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  மேலும் தனிநபர் விருப்ப பலகை மாற்றங்கள்
பொது அமைப்பில் சேர்க்கப்படக் கூடாது.  முடிந்த வரையில் தரப்படுத்தப்பட்ட பலகை
அமைப்புகள் மட்டும் இருத்தல் நலம்.

முடிந்தால் அடுத்த வார இறுதியில் இப்பலகை அமைப்பகள் குறித்து ஆய்ந்து எனது
கருத்தை எழுதுகிறேன்.

நன்றி,
சிவராஜ்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080714/afc34399/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list