[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ்க் கணிமைக் காலக்கோடு

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Fri Feb 29 21:08:15 GMT 2008


உத்தமம் குழுமத்துக்கு அனுப்பப்பட்ட மடல் இங்கே முற்செலுத்தப்படுகிறது..

இக்குழுமத்தில் உள்ளவர்களும் இப்பணிக்கு உதவும் படி வேண்டுகிறேன்.


-மு.மயூரன்

---------- Forwarded message ----------
From: M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>
Date: 2008/3/1
Subject: தமிழ்க் கணிமைக் காலக்கோடு
To: gbinfitt at yahoogroups.com


தமிழ்க் கணிமையின் வரலாறு எங்கும் முறையாகக் காலவாரியாகப் பதிவு
செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்றன.

முப்பது வருடங்களுக்குள்ளான சம்பவங்களையே தமிழ்க்கணிமை கொண்டிருக்கிறது. இது
மிக மிக அண்மைய வரலாறு.

தமிழ்க்கணிமையின் மூலவர்கள், முக்கிய ஆளுமைகள் எம்முடனிருக்கிறார்கள்.

இவர்களோடு இணைந்து தமிழ்க்கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யும் முயற்சியில்
ஈடுபடுவோமானால் அது எதிர்காலச்சந்ததிக்கு மிகுந்த பயனளிப்பதாய் அமையும்.
அத்தோடு தமிழ்க்கணிமைக்கு பங்காற்றிய பல்வேறு ஆளுமைகள் குறித்த தகவல்களை சீராக
பதிவுசெய்துகொள்ளவும் முடியும்.

இக்குழுமத்தில் உள்ளவர்கள் இப்பணிக்கு பெரிதும் உதவ முடியும்.தமிழ்க்கணிமையின் வரலாற்றினை ஆண்டுவாரியாகப்பதிவு செய்வதற்கும், சம்பவங்களோடு
தொடர்புடைய ஆளுமைகள், நிறுவனங்கள் பற்றிய தகவல்களை உள்ளிடுவதற்கும் ஏற்ற
வகையில் தமிழ் விக்கிபீடியாவில் காலக்கோடு ஒன்றினை உருவாக்கியிருக்கிறேன்.

பார்க்க:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81

இக்காலக்கோட்டிற்கும் அங்கே தொடுக்கப்பட்டுள்ள தமிழ்க்கணிமை தொடர்பான முக்கிய
ஆளுமைகள் தொடர்பான கட்டுரைகளுக்கும் சேர்க்கத்தகுந்த பயனுள்ள தகவல்களை
உள்ளிட்டு உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இத்தகைய பணியினை தனி நபர் செய்வதில் எழக்கூடிய தடைகள் சங்கடங்களை நீக்கும்
விதமாகவே இக்கட்டுரை கூட்டுழைப்பாக வளரத்தக்கவாறு திறந்த விக்கிபீடியாவில்
உருவாக்கபப்டுகிறது.

விக்கிபீடியாவில் பரிச்சயமற்றோர், இம்மடலுக்கு பதிலிடுவதன் மூலம் உங்களால்
இயன்ற, உங்களுக்குத்தெரிந்த தகவல்களைத் தந்துதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இப்பணியின் முக்கியத்துவத்தினை உத்தமம் உறுப்பினர்கள் பெரிதும்
உணர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.தோழமையுடன்

மு.மயூரன்

-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net | 078 514 1948 (Sri Lanka)-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net | 078 514 1948 (Sri Lanka)
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080301/0a133756/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list