[உபுண்டு_தமிழ்]xkb விசைப்பலகை மாற்றங்கள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Feb 21 10:20:17 GMT 2008


வணக்கம்

xkb விசைப்பலகை முறை பழகத்துவங்கியதிலிருந்து அதனை எளிதில் பிடித்துக் கொள்ள முடிந்தாலும் 
எண்கள் முதலியவற்றை உள்ளிடுவதில் சிக்கல்கள் நிலவியதை உணரமுடிந்தது. 

உதாரணத்திற்கு xkb தமிழ் யுனிகோடு பயன்படுத்தியிருந்தால் எண்களை உள்ளிடுவதற்கு மீண்டும் ஆங்கில 
முறைக்கு மாறிய பின்னரே உள்ளிட முடியும். இது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் விதமாகவும் ரூ
பாய், கிழமை, மாதம், வருடக் குறியீடுகள் உள்ளிட்டவற்றை சேர்த்தும் தமிழ் யுனிகோடு விசைப்பலகை
யினை மாற்றிப் பயன்படுத்தினோம்.
இதனை தொகுத்து ஒரு கோப்பாக கிடைக்கச்செயதுள்ளோம், xkb க்கான அடைவினுள் இருக்கும் 
symbols/in, symbols/lk, rules/xorg.xml மற்றும் rules/xorg.lst கோப்புகளில் செய்யப் 
பட்டிருக்கும் மாற்றங்களை சோதிக்க கீழ்காணும் வழிகளை அனுசரிக்கவும்.

முனையத்தை துவக்கி,

$ mkdir tamizh-xkb
$ cd tamizh-xkb
$ wget http://ubuntu-tam.org/podhigal/tamizh-xkb-pudusu.tar.gz
$ tar -xvvzf tamizh-xkb-pudusu.tar
$ ./tamizh_xkb.sh

தங்களது கடவுச்சொல்லினை உள்ளிடும் படி கோரப்படுவீர்கள். உள்ளிட்டதும் தேவையானவை அமையப்பெற்றுவி
டும்.
வழக்கம் போல் xkb உள்ளீட்டு முறையினைக் கையாண்டு தமிழ் வழக்கு மற்றும் தமிழ் மரபு என்றிருக்கும் 
இரண்டில் ஒன்றை தேர்வு செய்து உள்ளிட்டுப் பார்க்கவும். இவ் விசைப்பலகை வடிவங்களை பிரதிபலிக்கும் 
இரு படங்களும் மேற்படி பதிவிறக்கப்பட்டு விரிக்கப்படும் அடைவுக்குள் காணலாம். 

இதில் தங்கள் கருத்துக்களை ஒரு வாரத்திற்குள் அறியத் தந்தால் மேலிடத்திலும் புதுப்பிக்க ஏற்பாடு 
செய்ய ஏதுவாக இருக்கும். 
பி.கு: 

1) இலங்கைக்கான symbols/lk கோப்பிலும் இவ்விசைப்பலகை முறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
2) இது உபுண்டு வழி வந்த இயங்கு தளங்களுக்கு பொருந்தும். ஏனைய இயங்கு தளங்களில் (டெபியன் 
உட்பட) இக்கோப்புகள் /usr/share/X11/xkb/ பாதையில் கிடைக்கப்பெறுகின்றன. ஆக அவ்வியங்கு 
தளங்களில் செயற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து பின்னர் சோதிக்கவும்.
3) சூரியன் டாட் காம் மின்னெழுத்தை விடித்து அனைத்து எழுத்துக்களையும் கொண்ட வேறு மின்னெழுத்து
க்கள் உண்டா? சூரியன் டாட் காம் மின்னெழுத்தை ஜிபிஎல் உரிமத்தின் கீழ் வெளியிட்டால் டெபியன் மி
ன்னெழுத்துப் பொதிகளோடு சேர்த்துு உபுண்டுவிலும் புதுப்பிக்கலாம்
-- 
அன்புடன்,
ஆமாச்சு.

மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது 
சன்னல் கதவுகளை தவிர்க்கும் தருணம்


More information about the Ubuntu-l10n-tam mailing list