[உபுண்டு_தமிழ்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு - முன்பதிவின் அடிப்படையில்

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon Feb 11 06:53:49 GMT 2008


விவரம்: ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு

தேதி: பிப்ரவரி 23 சனிக்கிழமை, பிப்ரவரி 24 ஞாயிற்றுக் கிழமை

நோக்கம்: 

குனு/ லினக்ஸ் இயங்குதள அறிமுகம் மற்றும் அடிப்படைப் பயன்பாடுகள் குறித்த விளக்கம் மற்றும் நேரடிப் பயிற்சி வகுப்பு

நிகழ்ச்சி அமைப்பு:

குனு/ லினக்ஸ் அறிமுகம்
குனு/ லினக்ஸ் நிறுவுதற்கானப் பயிற்சி
குனு/ லினக்ஸ் பயன்பாடுகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும்
குனு/ லினக்ஸில் தமிழ் பயன்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள்
மற்றவை - வருங்கால திட்டங்கள் முதலியன

இடம்:

என் ஆர் சி பாஃஸ் வளாகம், எம் ஐ டி, குரோம் பேட்டை. (குரோம்பேட்டை பேருந்து மற்றும் இரயில் நிலையம் அருகில்)
எதிர்பார்க்கப் படுவோர்:

இது வரை குனு/ லினக்ஸ் குறித்த அறிமுகமற்றோர்/ குறைந்தோர்

ஏனைய விவரங்கள்:

இரண்டு நாட்களும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் இருக்கும். முதல் நாள் இருபது பேருக்கும் அடுத்த நாள் இருபது பேருக்குமென ஏற்பாடுகள் இருக்கும்.  தாங்கள் கலந்து கொள்ள விரும்பினால் shriramadhas at gmail.com என்ற முகவரிக்கு உடன் மடல் எழுதி முன் பதிவு செய்து கொள்ளவும். இந்நிகழ்ச்சி நிச்சயம் 'இலவசம்' அல்ல. குறைந்த பட்சம் நூறு ரூபாய் தர இயலும் தானே! இரு நாட்களுக்கும் சேர்த்து நாற்பது பேருக்கும் மேல் பதிய முன்வந்தால் தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களது விருப்பமும் வருங்காலங்களில் நிறைவேற்றப்படும். வேறென்ன வேண்டும் மடல் எழுதத் துவங்குங்கள்! மின்னஞ்சல் முகவரியை மறக்க வேண்டாம். 
இந்நிகழ்வு குறித்து தங்களது நண்பர்கள் தாங்கள் இருக்கும் பிற மடலாடற் குழுக்களிலும் அறியப் டுத்தி மென்விடுதலை வாசம் வீசச் செய்யுங்கள்!
*************************************************************************************
தேவைப்படும் விவரங்கள்

பெயர்:

மின்னஞ்சல் முகவரி:

முகவரி:

தொழில்:

தொடர்பு எண்:

கலந்து கொள்ள விரும்பும் தேதி: பிப்ரவரி 23 அல்லது 24

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: shriramadhas at gmail.com
*************************************************************************************

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080211/78325078/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list