[உபுண்டு_தமிழ்]Fwd: இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்...

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Mon Dec 8 02:13:21 GMT 2008


2008/12/7 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> 2008/11/26 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
>> ஆமாச்சு, தங்கள் அனுமானங்களில் பயனர் அமர்வின் மொழி ஆங்கிலமாக இருக்கப்போவதும்
>> ஒன்றாகத் தெரிவித்துள்ளீர்கள். அமர்வு  தமிழ் ஆயினும் தாங்கள் காட்டும் படிகள்
>> வேலை செய்யும். (அதே போல im-switch இலும் கட்டளைகள் பொதுவானவதுதான்). தமிழ்
>> வரைகலை இடைமுகப்பில் தமிழாக்கம் உள்ளதால் இரு மொழி அமர்வுகளிலுள்ள
>> திரைக்காட்சிகளையும் பக்கம் பக்கத் வைத்து மீண்டும் திரைக்காட்சி எடுத்து
>> அவற்றை கையேட்டில் காட்டினால் இரு மொழி பயனர்களுக்கும் பொது கையேடாகிவிடும்.
>>
>
> சரிதான். பயனரின் பார்வையில் புத்தகத்தில் இவற்றை மேற்கொள்ளலாம்.

அவ்வினாவிற்கு முன் நான் கேட்டிருந்த இன்னொரு வினாவிற்கு தங்கள் பதில்
என்னவென பார்க்க ஆர்வமாயுள்ளேன். அவ் வினாவானது:

"தாங்கள் im-switch முறைமை பற்றி அவ்வளவாக அறிந்திருக்காமல் இருப்பினும்
(தபுண்டுவிலும் உள்ள) பழைய வழக்கமான  75custom-scim_init இல் எழுதும்
முறையை தவிர்த்து /etc/conf.d இல் அவற்றை எழுத தேர்ந்தற்கு காரணம் ஏதாவது
உள்ளனவா? முக்கியமாக 75custom-scim_init இல் எழுதப்பட்டு தொடங்கப்படும்
ஸிம் எங்காவது செயலற்றுப் போகும் வழு அல்லது ஏதாவது நிரலை செயலிழக்கச்
செய்யும் வழு உள்ளதா என்பதைத் தெரிய விரும்புகிறேன்"

அடுத்து,
>
>> தங்கள் கையேடு இணைய வசதி உள்ளவர்களுக்கு என்பதால் scim-tables-additonal உம்
>> நிறுவச் சொல்லலாமே. அது நிறுவும் அட்டவணை முறை இன்ஸ்கிரிப்ட் மற்றும் Phonetic
>> விசைப்பலகைகள் m17n-conrib இல் உள்ளவைகள் போலத்தான் (அவைகள் Red Hat - indic
>> group ஆல் எழுதப்பட்டவை) . ஆனால் scim-tables-additonal இனால் ரெமிங்டன் (பழைய
>> தட்டெழுதி) விசைப்பலகை மேலதிகமாக கிடைக்கும். m17n இல் வரும் ta-typewriter
>> புதிய தட்டெழுதி முறையாகும்.
>>
>
> அதில் இருக்கும் விசைப் பலகைகள் m17n உடன் வருகிறது.

அதில் இருக்கும் இன்ஸ்கிரிப்ட் மற்றும் ஷப்தலிபி (Phonetic) கள்
மட்டும்தான் m17n இலும் வருகின்றன. ஆனால் நான் குறிப்பிட்ட படி
scim-tables-additional இல் உள்ள (NRCFOSS ஆக்கிய) இரெமிங்டன் விசைமாற்றி
m17n-contrib மற்றும் m17n-db பொதிகளில் இல்லை. பார்க்க:
http://cvs.m17n.org/viewcvs/m17n/m17n-contrib/im/#dirlist மற்றும்
http://cvs.m17n.org/viewcvs/m17n/m17n-db/MIM/ . அவற்றில் கிடையாது

மூன்றாம் தரப்பினர் யாராவது இரெமிங்டன் க்கான .mim கோப்பு ஆக்கியுள்ளனரா?

தட்டச்சு பொறியில் அல்லது கணினியில் தமிழ் இரெமிங்டன் விசைப்பலகை
பயன்படுத்துவோர் இந்தியாவில் உள்ளனரா? அப்படியாயின் m17n க்கு அதைக்
கொணர்தல் முக்கியமாகும். ஏனெனில் தொலைக்கால நோக்கில் ஏற்கனவே பலமான m17n
தொடர்ந்தும் இருந்து வரும். ஆனால் SCIM உள்ளிடல் முறைமைப் பொறி அடுத்த
வருடமே இல்லாமல் போகலாம். அதன் இடத்திற்கு தற்போது சோதனைக்காக வெளிவந்து
கொண்டிருக்கும் ibus மற்றும் ஆக்கம் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கும்
imbus ஆகினயன வரலாம். அவற்றில் அநேகமாக imbus தான் சிறந்ததாக இருக்கும்
எனக் கருதுகிறேன். சென்ற மாதம் scim-devel மடலாற்ற குழுமத்தில் தொடங்கிய
உரையாடல்களைப் பார்க்க :
http://n2.nabble.com/The-future-of-SCIM-project-td1462805.html .

அப்படியே scim (மற்றும் Arne Götje என்பவரின் கருத்துப்படி XKB, GTK2-IM
போன்றவைகளும்) இல்லாமல் போனாலும் அவற்றிற்கான scim-tables
போன்றவைகளுக்காக எழுதப்படும் விசைமாற்றிகள் புதிய பொறிகளுக்கு port
செய்யப்படும் விதமாகவே இருக்கும். ஆயினும் எந்த புது முன்முகப் பொறி
வரினும் கட்டாயம் m17n அதன் பின்முகமாக பயன்படுத்தும் வகையிலேயே
இருக்கும். ஏனெனில் விசைமாற்றிகளை ஆக்குவதில் ஏனைய பின்முகங்களை விட m17n
இல் தான் மேலதிக வசதிகள் கூடுதலாக உள்ளன.


> மேலும் டெபியனுக்கான
> scim-tables-additonal இன்னும் தமிழ்99 கொண்டிருக்கவில்லை. பெடோராவில்
> இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
>

Red Hat (RHEL-4) மற்றும் Fedora 9, 10 காப்புக்களில்
scim-tables-additional இல் தமிழிற்கான விசைப்பலகைகள் ஒன்றும் இல்லை.
தனித் தனி மொழிகளுக்கான scim-tables களை தேடுகையில் தற்போது தமிழ்
மற்றும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் இல்லை எனவும் தெரிகிறது. எல்லாம் m17n
க்கு நகர்த்தப்பட வேண்டும் என்பது அவர்கள் கொள்கை என Jens Peterson
சுமார் 3 வருடம் முன் ஒரு மடலில் கூறியிருந்தார். அவ்வாறே அவர்கள்
செய்து வருவதாகத் தெரிகிறது. எனிலும் தாங்கள் பெடோராவில்
இற்றைப்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுவது scim-tables க்குதான்
ஆயின் அதை எங்கிருந்து பெறலாம் என்பது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.
பார்க்க வேண்டும்.

BOSS Linux  க்கு ஆக்கப்பட்ட scim-table விசைமாற்றிகளில் தமிழ்99
பெயரிலும் ஆக்கியுள்ளார்கள். அதை எல்லா டெபியன் சார் தளங்களிலும்
பயன்படுத்த இயலுமாயினும் அது தமிழ்99 க்கான வதிமுறைகள் பலவற்றை
பின்பற்றாதது. (அதே தமிழ்99 என்று அழைப்பது தவறு)

~Sethu
> --


More information about the Ubuntu-l10n-tam mailing list