[உபுண்டு_தமிழ்]மொழியாக்கத்தில் அவதானம்

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Aug 4 08:21:34 BST 2008


terminal செயலிகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளமை, உபுண்டுவை தமிழ்
இடைமுகப்புடன் பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
குறிப்பாக மிக முக்கியமான நிர்வாக, இடர்நேர பய்ன்பாடுகளான Xorg போன்றவற்றை
தமிழாக்கி வைத்திருப்பதால், தேவையற்ற சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க
வேண்டிஅய்தாகிறது.

எடுத்துக்காட்டாக

தமிழ் இடைமுகப்புக்கு மாற்றி வைத்திருக்கும் கணினியின்  Xorg பழுதுபட்டால்
எம்மால் GDM இற்கு செல்ல முடியாது. terminal மூலமாகவே அதைத்திருத்தவும், மீள்
அமைப்பாக்கம் செய்துகொள்ளவும் முடியும். அவ்வேளையில் தமிழாக்கப்பட்டுள்ள
இடைமுகப்பு சற்றேனும் வாசிக்கத்தக்கதாயில்லாமல் நற்சத்திரக்குறிகளுடனும்
கேள்விக்குறிகளுடனும் காட்சியளிக்கிறது.  மொழியை மாற்றிக்கொள்ள GDM உம் இல்லை.


இது எவ்வளவு பாரதூரமான பிரச்சினை என்பதைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.  இவ்வாறான
இடர்நேர முக்கியத்துவம் வாய்ந்த முனையச்செயலிகளை தமிழாக்கிக்கொண்டுபோனால்
சாதாரண பயனராலும் தமிழ் இடைமுகப்பைப் பயன்படுத்த முடியாமற்போகும்.

தமிழ் இடைமுகப்புப்பயன்பாட்டை இல்லாமற்செய்யும் இவ்வாறான தமிழாக்கங்களை
தடுப்பது எப்படி?


இதற்கு இங்கே தமிழாக்கப்பணிகள் ஆரம்பித்த காலப்பகுதியிலேயே என்னால் எச்சரிக்கை
ஒன்று வெளியிடப்பட்டது


இடைமுகப்பு மொழியாக்கம் செய்யத்தேர்ந்தெடுக்கும் செயலியை, ஆங்கிலத்திலும்
பின்னர் தமிழிலும் பயன்படுத்திப்பார்க்காமல் மொழியாக்கம் செய்யவேண்டாம் என்று
கேட்டுக்கொண்டிருந்தேன்.

அதைப்பலர் கவனித்ததாகத்தெரியவில்லை.

இடைமுக மொழியாக்கத்தை, சொற்களை எடுத்து வைத்துக்கொண்டு தமிழாக்கம் செய்வதன்
மூலம் சாதிக்க முடியாது. அது சிக்கல்களையும் தவறுகளையுமே தோற்றுவிக்கும்.

இவ்வாறு தாம் வாழ்கையில் பயன்படுத்தாத செயலிகளை மொழியாக்கம் செய்யும்
முயற்சிகளைத்தடுத்து நிறுத்துவதற்கு என்ன பொறிமுறையைக்கையாளலாம் என்று நாம்
சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது நான் தமிழ் இடைமுகப்பை ஆங்கிலத்துக்கு மாற்றிவைத்துப் பயன்படுத்த
நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதுபோல பல்லாயிரம் தமிழ் க்னூ லினக்ஸ் பனர்களும்
நிர்ப்பந்திக்கப்படும் அவலம் நேராமல் தடுக்க இது மிக மிக அவசியம். அவசரம்.


தோழமையுடன்

மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080804/41325a4b/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list