[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Fri Apr 25 10:43:25 BST 2008


2008/4/25 Ravishankar <ravishankar.ayyakkannu at gmail.com>:

> உபுண்டு 8.04க்கு மாறிய பிறகு தமிழ் அவ்வளவு சிறப்பாகத் தெரியவில்லை. மங்கிய
> தோற்றம் இருக்கிறது.
>
> இதற்கு தீர்வு கண்டவர்கள் சொல்லவும். தீர்வு காணும் வரை மற்றவர்கள்
> இற்றைப்படுத்துவதையும் தவிர்க்கலாம்.
>
> குறிப்பாக, firefox உலாவியில் எந்த எழுத்துரு நன்றாக இருக்கிறது.
>
> ரவி
>
>
இதைப்பற்றி முன்னர் உபுண்டு தமிழாக்க குழுமத்தில் மயூரனும் நானும் இட்ட மடல்களை
பின்வரும் மடலுடன் அதன் 'Next Message" வழியாக எல்லா மறுமொழிகளிலும்
பார்க்கவும்.

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-April/001407.html

எனது மறுமொழியொன்றில் (
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-April/001410.html)
முன்னிருப்பு எழுத்துரு அமைப்புக்களிலிருந்து மாற்றாக சூரியன் டொட் கொம்
பயன்படுத்துகையில் எழுத்துரு அளவைக் கூட்டினால் துல்லியத்திலும் தென்படும்
அளவிலும் முன்னேற்றமிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆயினும் தளம் மற்றும் உலாவிகளின் முன்னிருப்பு எழுத்துரு (Sans) அளவு 10, 12,14
களில்  நிறமங்கலுடனும் சிறிய அளவுகளில் எழுத்துக்களில் அழிக்கப்பட்டது போலவும்
இருப்பது இவ்வெளியீட்டில் வந்துள்ள ஒரு புதிய வழுவே. கடந்த சனியன்று மயூரனைச்
சந்தித்தப் போது உபுண்டு நடந்துனர்களிடம் இவ் வழு சுட்டிக்காட்டப்பட வேண்டியது
அவசியம் என தீர்மானித்திருந்தோம்.

ஆனால் வழக்கம் போல இதுவரை வழு அறிக்கை முன்வைக்க எனக்கு நேரம் ஒதுக்க
இயலாமையால் தாமதித்துள்ளேன். :>(

கடந்த சில நாட்களாக ( 19 - 23 திகதிகளில் ) நான் எடுத்த திரைக்காட்சிகள் பின்
வருபவன;

(எல்லாவற்றையும் உலாவி வழியாக பார்க்கையில் ஒரு படி பெரிது படுத்திப்பாருங்கள்.
பயர்பாக்சில் பூதக்கண்ணாடி ஒன்று தெரியுமே - அதைச் சொடுக்கவும்)

1.  http://skhome.googlepages.com/gutsy-beta-hardy-beta-gnome-gedit.png
அது  ஜிஎடிட்டில் (Sans - size: 10) கட்ஸி-பீட்டா நிகழ்வட்டு அமர்விலிருப்பதை
விட ஹார்டி-பீட்டா அமர்வில் துல்லியம் மிகவும் குறைந்து போயுள்ளதைக் காணலாம்.

2. http://skhome.googlepages.com/Hardy-Gnome-gedit-sans-diff.png
அதில் உபண்டு-ஹார்டி-பீட்டாவில் கநோம் மேசைச்சூழலில் ஜிஎடிட்டில் Sans
எழுத்துரு அளவைக் கூட்டினால்தான் முன்னேற்றம் ஏற்படுவதை அவதானிக்கலாம்.

3. http://skhome.googlepages.com/Hardy-kde-gedit-sans-diff-sizes-.png
4. http://skhome.googlepages.com/Hardy_xFce_gedit-diff-sizes.png
அவைகள் உபுண்டு-ஹார்டி-பீட்டாவில் முறையே கேடீஈ, xFce மேசைத்தள சூழலல்களில்
அவ்வாறே.

5. http://skhome.googlepages.com/kedit-gedit-on-hardy-beta.png
இதில் உபுண்டு-ஹார்டி-பீட்டாவில் கேஎடிட் மற்றும்  ஜிஎடிட் ஆகியவைகளுக்கிடையே
எழுத்துருவின் தரத்தில் வித்தாயாசம் இருப்பதைக் காணலாம்.  கேஎடிட் இல்
துல்லியம் போதுமானதாகவுள்ளது.கேஎடிட் க்கான எழுத்துருவக்கி Qt. ஜிஎடிட் க்கு
பாங்கோ.

6. http://skhome.googlepages.com/FFandKonq_on_Hardy.png
இது உபுண்டு-ஹார்டி-பீட்டாவில் வலைப்பதிவு பக்கம் ஒன்றை (முன்னிருப்பு
எழுத்துரு மற்றும் அளவுகளுடன்) கான்கொரர் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளில்
பார்க்கையில் அவறறில் கான்கொரரில் துல்லியம் கூடுதலாகவிருப்பதைக் காணலாம்.
கான்கொரருக்கான எழுத்துருவக்கி Qt. பயர்பாக்சுக்கு பாங்கோ.

{ அவ்வலைப்பதிவர் கூடிய விரைவில் முதல் பதிவை இடவுள்ளார் என்ற எச்சரிக்கையையும்
தெரிவித்துக் கொள்கிறேன் - ;) }

மேற்காட்டியவற்றிலிருந்து பாங்கோ பயன்படுத்தும் ஜிஎடிட் மற்றும் பயர்பாக்ஸ்
போன்றவைகளில்தான் பிரச்சினை உள்ளது என கணிக்கலாம். ஆயினும் நிறுவியுள்ள
குபுண்டு பீட்டா வழி   கேடீஈ மேசைத்தளத்திலும் தமிழ் (ta_IN) மொழிச் சூழலில்
நிரல்கள் (menu commands) மற்றும் Panel இல் தமிழில் உள்ள பயனர் பெயரும்
துல்லியமற்றதாக மங்கியே தென்படுகின்றன.

தேவையான தீர்வு என்னவெனில் உபுண்டு நடத்துனர்களுக்கு வழு அறிக்கை மூலம்
சுட்டிக்காட்டி மேம்பாட்டலைப் பெறுவது. நான் விரைவில் வழு அறிக்கை தாக்கல்
செய்வேன். ஆயினும் வேறு யாரும் ஏற்கனவே வழுத்தாக்கல் செய்திருப்பின் அல்லது
செய்யவிருப்பின் செய்தபின் வழு அறிக்கைக்கான தொடுப்பை இங்கு எழுதும் படி
கேட்டுக்கொள்கிறேன்.

நான் மேற்காட்டிய திரைக்காட்டசிகள் எல்லாம் ஹார்டி பீட்டா கொண்டு நிறுவிய
இயங்குத்தளத்தில் பார்ப்பவைகளாயினும் எனது உபுண்டு மற்றும் குபுண்டு
தளங்களுக்கும் தரப்பட்ட எல்லா மேம்பாடுகளையும் இற்றைப்படுத்திவந்துள்ளதால்
தற்போது அவை இறுதியாக்கப்பட்ட வெளியீடுளே. எனக்குத் தெரிந்த வரைநில்
இறுதியாக்கப்பட்டது 21 அல்லது 22 ஆம் திகதியிலேயே. (வெளியீடு நேற்றைய
தினமாயினும்). எனவே புதிதாக இறுதியாக்கப்பட்டுள்ள இறுவட்டுக்களைப் பதிவிறக்கி
நிறுவுவோருக்கும் நான் காட்டியவாறே தோற்றங்கள் இருக்கும். அப்படியல்ல என
நற்செய்திகள் இருப்பின் அறிய ஆவல் கோண்டுள்ளேன்.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080425/7c41c5aa/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list