[உபுண்டு_தமிழ்]Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா?

K. Sethu skhome at gmail.com
Tue Apr 15 18:59:12 BST 2008


2008/4/15 M.Mauran | மு.மயூரன் <mmauran at gmail.com>:

> Hardy beta இல் தமிழ் எழுத்துக்கள் தெளிவாக உள்ளனவா?
>
> Apps are rendering Tamil characters well. But appearance seems very poor
> and blurred.
>
> -M.Mauran
>

ஆம். அப்படித்தான் எனக்கும். துல்லியமாக்க அளவை (font size) பெரிதாக்க
வேண்டியள்ளது, காரணம் தெரியவில்லை.

ஓபன் ஆபிஸ் எழுதியில் Free Sans உருவாக்கத்தில் சொல்லீற்றில் மெய்யிருப்பின்
புள்ளி விலகி விடுகிறது. அது பழைய வழு ஆனால் கட்ஸியில் இருக்கவில்லை. மற்றையபடி
ஓஓ வில் ஏனைய எழுத்துருக்களுக்கு பிரச்சினைகள் இல்லை.

பயர்பாக்ஸ், ஓஓ-எழுதி  ஆகியனவற்றில் இருந்து நேரடியாக (அதாவது pdf
ஆக்கத்தேவையில்லாமல்) அச்சிடுதலில் இப்போது பிரச்சினைகள் இல்லை.
தண்டர்பேர்ட்டில் இருந்து அச்சிடுகையில் பல சிக்கல் எழுத்துருவாக்கங்கள்
தவறுகின்றன.

பயர்பாக்ஸ்-பீட்டா (தற்போது 3b5) அடிக்கடி செயலிழந்து உறைந்து போகிறது. பீட்டா
எனபதால் வரும் நாட்களில் முன்னேறலாம். அதனால்  பயர்பாக்ஸ்-2 தான்
பயன்படுத்துகிறேன்.

இரு வாரம் முன் நான் சோதிக்கத் தொடங்கியதிலிருந்து அடிக்கடி compiz
விழுந்துள்ளதாக (crash) வழு அறிக்கை வரும். ஆனல் இன்று அதன் மேம்பாடு ஒன்று
வந்தது. அதன் பின் crash ஆவதாகத் தெரியவில்லை. ஆனால் cube உட்பட்ட முப்பரிமான
மாயங்களை இன்னும் அமைத்துச் சோதிக்கவில்லையாதலால் பிரச்சினை முற்றாகத்
தீர்ந்துள்ளதா என்பதறியேன்.

உபுண்டுவில் முதல் முறையாக பாங்கோவிற்கு SIL.org இனரது  கிரைபைட் துணை
(Graphite support) பொதிகள் இரண்டு உள்ளடக்கியுள்ளனர். smart fonts உருவாக்கி
மேம்படுத்த Graphite அடிப்படை உதவும் எனத் தெரிகிறது. James Cass எனபவர் ஆக்கிய
Code2000-tamil எழுத்துரு பாவிப்பதில் நான் கண்டறிந்தவைகளை விரைவில் எழுதுவேன்.
(SIL.org தளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து பதிவிறக்ககூடியது அது)

மேலும் scim (அல்லது வேறு உள்ளிடல் முறைமைகள் -uim, iiimf, gtk2im) தானியக்க
ஆரம்பித்தலை அமைக்க சூழல் வேறிகளுக்கான அமைப்புக்களை 75custom_scim-init
கோப்பில் (அல்லது /etc/environment கோப்பில்) இட்டுச் செய்வதற்கு பதிலாக
சிறப்புகள் கூடிய im-switch கட்டமைப்பை பயன்படுத்தாலாம். அதை விளக்கிக்காட்டும்
கையேடு  ஒன்றைத் தயாரித்து வருகிறேன் (தேவையான ஒப்பீட்டு அட்டவணைகள தற்போது
ஆக்கி வருகிறேன்).  அவற்றை எழுதிய பின் அறிவிப்பேன்.

~சேது
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080415/da55b290/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list