[உபுண்டு_தமிழ்]கட்ஸி குபுண்டு அனுபவம்..

K. Sethu skhome at gmail.com
Sat Sep 29 06:02:46 BST 2007


ஆமாச்சு எழுதியது:
-------- Original Message --------
Subject: [உபுண்டு_தமிழ்]கட்ஸி குபுண்டு அனுபவம்..
From: ம. ஸ்ரீ ராமதாஸ் <amachu at ubuntu.com>
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
Date: Thu Sep 13 2007 18:03:35 GMT+0530 (IST)
> வணக்கம்,
>
> குபுண்டு கட்ஸி டிரைப் 5 னை பதிவிறக்கி தமிழை  முதன் மொழியாய் கொண்டு 
> நிறுவியதில்.. கேபசூ  தமிழ் மொழிக்கான பொதிகள் நிறுவப் படவில்லை.
>
> தமிழை  மொழியாகத் தேர்வு செய்ய இயலவில்லை. தமிழ் விசை வசதிக்கான ஸ்கிம் பொதிகளும் 
> நிறுவப் படவில்லை.
>
> இது பைஸ்டியிலும் இருக்கிறது.  நான் எட்ஜியிலிருந்து மேம்படுத்தியிருந்தமையால் வழு 
> தெரியவில்லை.
>
> https://bugs.launchpad.net/ubuntu/+bug/139359
>
> பதிவு செய்ய நேரிட்டது.  :-(
நானும் முதலில் பதிவிறக்கி நிறுவிய  குபுண்டு பைஸ்டி-பீட்டாவைத்தான் பின்னர் இறுதியான 
குபுண்டு பைஸ்டியாக மேம்படுத்தினேன்.

எந்தவோர் உபுண்டு / குபுண்டு / சுபுண்டு / எடுபுண்டு இறுவட்டிலும் அதில் உள்ளடக்கப்பட்ட 
அனைத்து பொதிகளின் பட்டியலை இறுவட்டில் உள்ள /casper/ அடைவினுள் உள்ள 
filesystem.manifest மற்றும் filesystem.manifest-desktop ஆகிய இரு 
கோப்புகளிலும் காணலாம். (முன்னையது நிகழ்வட்டு அமர்விற்கும் பின்னரது வன்தட்டு 
நிறுவலுக்கும் ஆனவைகள் )

நம்மிடம் கைவசம் இல்லாத  ஓர் இறுவட்டில் உள்ள பொதிகளின் பட்டியலை அறிய அதன் mainfest 
கோப்பை அவ்விறுவட்டின் iso வை பதிவிறக்குவதற்கான தளத்திலேயே காணலாம்.

உதாரணமாக குபுண்டு பைஸ்டிக்கு:
http://releases.ubuntu.com/releases/kubuntu/feisty/kubuntu-7.04-desktop-i386.manifest

தற்போதைய கட்ஸி-பீட்டாவிற்கு:
http://releases.ubuntu.com/releases/kubuntu/7.10/kubuntu-7.10-beta-desktop-i386.manifest

mainfest கோப்பு ஒன்று 24 kB ~ 25 kB அளவுதான்.

குபுண்டு பைஸ்டிக்கான manifest  கோப்பை பதிவிறக்கி gedit இல் திறந்து find மூலம் 
"scim", "skim" வருமிடங்களை பட்டியலில் தேடுகையில் பின்வரும் 4 மட்டுமே 
உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது புலனாகும்.

scim-qtimm 0.9.4-0ubuntu5
libscim8c2a 1.4.4-7ubuntu1
libskim0 1.4.5-1ubuntu1
skim 1.4.5-1ubuntu1

குபுண்டு - டாப்பர் , எட்ஜி  மற்றும் இப்போது வெளிவந்துள்ள கட்ஸி-பீட்டா ஆகியனவற்றிலும் 
அவ்வாறே. ( பொதிகளின் வெளியீட்டு எண்கள்  வேறுபாடுகளுடன்)

ஆனால் நான் முன்னர் பதிவிறக்கிப் பாவித்திருந்த குபுண்டு பைஸ்டி-பீட்டா சோதனை வெளியீட்டில் 
மட்டும் விதிவிலக்காக பின்வருபவைகளும் இருந்திருக்கின்றன:

scim 1.4.4-7ubuntu1
scim-gtk2-immodule 1.4.4-7ubuntu1
scim-modules-socket 1.4.4-7ubuntu1
scim-modules-table 0.5.6-1build1
scim-tables-additional 0.5.6-1build1

பைஸ்டி உபுண்டு மற்றும் பைஸ்டி சுபுண்டு வெளியீடுகளிலும் அவ்வாறு skim, scim-qtimm 
மற்றும் libskim தவிர்ந்த ஏனைய மேலதிக பொதிகள் இறுவட்டில் உள்ளன.

எனவே இணையத் தொடர்பு இல்லா பயனர் ஒருவர் பைஸ்டி உபுண்டு அல்லது பைஸ்டி சுபுண்டு 
அமர்வில் Qt சார் செயலிகளில் scim மூலம் தமிழ் உள்ளிட இயலாவிடிலும் ஏனைய எல்லா gtk 
சார் செயலிகளிலும் உபுண்டுவிலுள்ள ஓபன் ஆபிசிலும் scim-tables-additional தரும் 
தமிழ் விசைப்பலகைகள் மூலம் தமிழ் உள்ளிட முடியும். (சுபுண்டு இறுவட்டில் ஓபன் ஆபிஸ் 
உள்ளடங்களில்லை.). வரும் கட்ஸி உபுண்டு மற்றும் கட்ஸி சுபுண்டு வெளியீடுகளிலும் அவ்வாறே.

குபுண்டு இறுவட்டில்  உள்ளடக்கப்பட்டுள்ள 4 பொதிகளுடன் மட்டும்  ஸிம் daemon ஐ ஆரம்பிக்க 
இயலும் தான். ஆனால் ஸிம்மின்  பன்மொழி உள்ளிடல் முறைமைகள் (Multi-language 
IMEngines) ஆன scim-m17n, scim-tables, scim-uim  மற்றும்  scim-kmfl 
விசைப்பலகைகளை நிச்சயமாக பாவிக்க முடியாது. ஏனென்றால் scim, scim-gtk2-immodule, 
scim-modules-socket போன்ற அடிப்படைகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஒற்றை மொழி 
உள்ளிடல் முறைமைகள் (Specific-language IMEngines) என்பவைகளில் எனக்கு அனுபவமுள்ள 
சிங்களத்திற்கான பொதியை நிறுவுவதற்கும் அவ்வாறே. வேறு CJK மொழிகளுக்கான ஒற்றை மொழி 
உள்ளிடல் முறைமைகள் ஏதாவதையும் குபுண்டு இறுவட்டில்  உள்ள 4 பொதிகளை மட்டும் 
நிறுவியுள்ள தளத்தில் பாவிக்க முடியுமா என்பதை நான் ஆராயவில்லை இதுவரை.

ஆமாச்சு பதிப்பித்துள்ள வழுக்களை களைய வேண்டுமாயின் அவர்கள் உபுண்டு,  சுபுண்டு 
இறுவட்டுகளில் உள்ள ஏனைய  scim க்கான  பொதிகளையும்  குபுண்டு  இறுவட்டுக்கு சேர்க்க 
வேண்டும். அவ்வண்ணம் செய்யப்படின் குபுண்டு  இறுவட்டு மட்டுமே கிடைக்கப்பட்டு மேலதிக 
பொதிகளைப் பெறவியலாத நிலையில் உள்ள தமிழ் பயனர்கட்கு பெரிதும் உதவும்.

குபுண்டு கட்ஸி-பீட்டாவுக்கான mainfest பார்க்கையில் இதுவரை நாம் விரும்பும் அம் 
மாற்றங்கள் வரவில்லை எனப் புலனாகிறது.

குபுண்டு இறுவட்டுக்குள் மேலும் பொதிகளை உள்ளடக்க இடமின்மை என்ற தடைக் கல்லும் இருக்கலாம்.

~சேது

பி.கு.:  உபுண்டு -  கட்ஸி-பீட்டா  இப்போது  பதிவிறக்கிக்கொண்டுள்ளேன்.




More information about the Ubuntu-l10n-tam mailing list