[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

K. Sethu skhome at gmail.com
Sat Nov 17 05:33:24 GMT 2007


மயூரன்

இரு நாட்கள் முன் நான் எழுதியதற்கு தொடர்ச்சியாக இங்கு தபுண்டுவின் files/fonts 
அடைவிலிருந்து எழுத்துருக்களை (பாமினி, SooriaynDotCom....) சேர்த்துக் 
கொள்ளுவதறகான install.sh இலுள்ள வரிகள் பற்றி:

தபுண்டுவில் பினவரும் வரிகளை அவதானிக்கவும்
 >>
#------- installing fonts -------------------

gksudo cp files/fonts/* /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/
mkdir ~/.fonts
cp files/fonts/* ~/.fonts
fc-cache
<<<

முதல் வரி "gksudo cp files/fonts/* ....." + நாலாம் வரி "fc-cache" இரண்டும் 
நிறைவேற்றப்படின்  கட்டகம் பரவலாக (system wide) எந்தவொரு பயனர் கணக்கு அமர்விலும் 
அவ்வெழுத்துருக்கள் பயன்படுத்துவதற்கு  கிடைக்கும் நிலை  ஏற்படும். 

அவ்வாறு இவ்விரண்டு வரிகளும் சரியாக நிறைவேற்றப்படின் மேலதிகமாக "cp files/fonts/* 
~/.fonts" + "fc-cache" மூலம் தனிப்பயனர் கணக்கிற்காக மட்டும்  (per-user or 
user's own) கிடைக்கும் நிலை ஏற்படுத்த அவசியமில்லை.

ஆனால் ஏற்கனவே /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/  அடைவு 
ஏற்படுத்தப்பட்டிருக்காவிடில் "gksudo cp files/fonts/* .... ' கட்டளை நிறைவேறாது!

அதைக்காண: ஒரு நிகழ்வட்டு அமர்வில் repo மூலம் ttf-tamil-fonts பொதியை 
நிறுவியிருக்காத சூழலில் வேறெந்த முறையிலும் 
/usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ அடைவு ஏற்படுத்தப்படாத நிலையில் 
தபுண்டுவை நிறுவினால் பார்க்கலாம் - தபுண்டு  install.sh அந்த 
/ttf-tamil-fonts-fonts/ அடைவை ஏற்படுத்தி அதனுள் உபுண்டுவின் ttf-tamil-fonts  
பொதியினால் கொடுக்கப்படும் TSCu, TAMu எழுத்துருக்களின் ttf கோப்புக்களை மட்டுமே 
சேர்க்கும். தபுண்டு கொணரும் எழுத்துருக்களுக்கான ttf கோப்புக்கள் அங்கு இருக்காது.

எனவே /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ அடைவினுள் தபுண்டு கொணரும் 
எழுத்துருக்கான ttf கோப்புக்கள் சேர்ப்பதன் மூலம் அவற்றை  கட்டகம் பரவலாக அளிப்பதற்கு 
பின்வரும் திருத்தங்கள் செய்யலாம்:

மேலே காட்டப்பட்ட "#------- installing fonts -------------------"  தலைப்பையும் 
அதன் கீழான 4 வரிகளையும் தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றிவிட்டு அவற்றில் தலைப்பின் 
கீழுள்ள முதலாம் மற்றும் நானகாம் வரிகளை மட்டும், "#------- installing packages 
-----------------" என்பதின் கீழுள்ள zenity கட்டளைகளின் முடிவை அடுத்து சேர்க்கவும்.

அதாவது:

 >>
#------- installing packages -----------------

zenity --progress --pulsate --auto-close --title "தபுண்டு 7.10.1 - 
EXTRACT - DOUBLE CLICK - RUN" --text "\n அவசியமான பொதிகள் நிறுவப்படுகின்றன. 
இதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். காத்திருப்பீங்கதானே?" & sudo dpkg -i 
files/debs/*.deb
killall zenity
<<

என்பதை அடுத்து

#------- installing fonts -------------------

gksudo cp files/fonts/* /usr/share/fonts/true type/ttf-tamil-fonts/
fc-cache 

ஆகிய வரிகள் இருப்பின் /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts/ அடைவினுள் 
தபுண்டு கொணரும் எழுத்துருக்களுக்கான ttf கோப்புக்கள் சென்றடைவது திண்ணம்.

ஆனால் இன்னொரு யோசனையும் என் மனதில் எழுந்துள்ளது. வேறு பெயருடன் இன்னொரு அடைவை 
/usr/share/fonts/true type/ கீழ் ஏற்படுத்தி (உதாரணம்: "ttf-ta-tabuntu-fonts" 
) அதனுள் தபுண்டு கொணரும் எழுத்துருக்களுக்கான ttf கோப்புக்களை இடும் வண்ணம் பினவரும் 
வரிகளை உள்ளடக்கலாம்:

#------- installing fonts -------------------

gksudo mkdir /usr/share/fonts/true type/xxxx/
gksudo cp files/fonts/* /usr/share/fonts/true type/ttf-tamil-fonts/
fc-cache

அதில் /xxxx/ என நான் சுட்டியுள்ளதற்கு தாங்களே ஒரு பொருத்தமான பெயரிடுங்கள்.

தபுண்டுவினால் சேர்க்கப்பட்ட எழுத்துருக்கள் எவைகள் எனபதை வேற்றாக காட்ட இந் நடவடிக்கை 
உதவும். மேலும் மேற்கூறிய வரிகளை  "#------- installing packages -------- " 
வரிக்கு மேலேயே இட முடியும்.

தங்களதும் ஏனைய நணபர்களதும் கருத்துக்களைக் காண விரும்புகிறேன்.

~சேது
 
-------- Original Message --------
Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 
வெளிவந்துவிட்டது
From: K. Sethu <skhome at gmail.com>
To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
Date: Wed Nov 14 2007 22:40:29 GMT+0530 (IST)
> ஆமாச்சு:
> //உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.
>
> http://packages.debian.org/ttf-tamil-fonts//
>
> நண்பர்களே கட்ஸியில் இன்னொரு மாற்றத்தையும் அவதானிக்கவும். பைஸ்டி வரைக்கும் உபுண்டுவின் 
> ttf-tamil-fonts பொதியில் 3 TAMu, 3 TSCu அத்துடன் LohitTamil என மொத்தமாக 7 
> தமிழ் எழுத்துருக்கள் இருந்து வந்தன. அதாவது டெபியனின் ttf-tamil-fonts 
> பொதியைப்போலவே 
> (http://packages.debian.org/etch/ttf-tamil-fonts/all/filelist). 
> அப்பொதி உபுண்டு இறுவட்டுகளில் உள்ளடக்கப்பட்டு வந்தது.
>
> ஆனால் கட்ஸியின் இறுவட்டில் ttf-tamil-fonts பொதி இல்லை. மாறாக இறுவட்டில் உள்ள 
> ttf-indic-fonts-core என்ற பொதியுள்  LohitTamil மட்டும் உள்ளது. ஏனைய வழக்கமான 
> TAMu, TSCu எழுத்துருக்கள் ஆறும் தறபோது உபுண்டு-கட்ஸியின் Main repo வில் உள்ள 
> ttf-tamil-fonts பொதிக்குள் தான் உள்ளன.
> இதானால்தான் மயூரன் ttf-tamil-fonts பொதியை முதன் முறையாக தபுண்டுவினுள் 
> சேரத்துள்ளார் எனத்தெரிகிறது. அது நன்று. தபுண்டுவின் நிறுவி அப்பொதியையும் ஏனைய 
> deb களைப்போலவே சரியாகவே நிறுவுகிறது.
> ஆனால் மற்ற 3 எழுத்துருக்கள் (Bamini, SooriyanDotCom and TABMaduram) நிறுவும் 
> வரிகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
> இப்போது ( ~10:30 pm) தூக்கம் ஆதிக்கம் தொடங்கிவிட்டது -;) எனவே நாளை இரவு 
> அதைப்பற்றி தொடர்வேன்.
>
> ~சேது
>
>
>
>
>
>
>
>
> -------- Original Message --------
> Subject: Re: [உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு 
> வெளிவந்துவிட்டது
> From: amachu <amachu at ubuntu.com>
> To: ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> Date: Tue Nov 13 2007 21:25:23 GMT+0530 (IST)
>> On Monday 12 November 2007 04:07:49 M.Mauran | மு.மயூரன் wrote:
>>  
>>>  திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
>>> tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
>>>     
>>
>> மயூரன்,
>>
>> டெபியன் http://www.debian.org/social_contract#guidelines 
>> நெறிகளுக்கிணங்கி மின்னெழு
>> த்துக்கள் கிடைத்தால் சொல்லுங்ளேன்.
>>
>> சமீபத்தில் எல்காட் நிறுவனம் வெளியிட்டவற்றை டெபியனில் சேர்க்க  வழுத் தாக்கல் செய்தேன். 
>> http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=448727
>>
>> உரிமம் ஒத்துப் போனால் டெபியனில் சேர்த்து உபுண்டுவிலும் வரவைத்துவிடலாம்.
>>
>> http://packages.debian.org/ttf-tamil-fonts
>>
>> அன்புடன்,
>> ஆமாச்சு
>>   
>
>
>





More information about the Ubuntu-l10n-tam mailing list