[உபுண்டு_தமிழ்]Fwd: [GNU/Linux குறிப்பேடு] Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது
M.Mauran | மு.மயூரன்
mmauran at gmail.com
Sun Nov 11 22:37:49 GMT 2007
தபுண்டு (தமிழ் உபுண்டு)<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81>(பார்க்க:
முன்னைய
வலைப்பதிவொன்று <http://tamilgnu.blogspot.com/2007/05/blog-post.html>)
பொதியின் Gutsy <http://www.ubuntu.com/getubuntu/releasenotes/710tour> யுடன்
ஒத்திசையும் பதிப்பை இன்றுமுதல் தரவிறக்கிக்கொள்ளலாம்.
புதிய பொதி தபுண்டு வலைமனையில்
தரவேற்றப்பட்டிருக்கிறது.<http://tabuntu.sourceforge.net/>
பொதி, "tabuntu_7.10.1_i386" எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
அளவு 4.1 MB.
நிறுவலில், பயன்பாட்டில் ஏற்படும் சிக்கலகளை, வழுக்களை உடனுக்குடன் எனக்கு
அறிவிப்பதன்மூலம் மற்றவர்களுக்கு உதவுங்கள். தபுண்டு நிரலாக்கத்திலும் தபுண்டு
செயற்றிட்டத்திலும் பங்கெடுக்க வாருங்கள்.
<http://bp2.blogger.com/_iWCfChmbLr0/RzeDAUHwWlI/AAAAAAAAALo/clGAzL2Bbus/s1600-h/Screenshot-1.png>
== என்ன புதுசு?==
இந்தத் தமிழ் உபுண்டு பதிப்பில் பாரிய மாற்றங்கள் பலவற்றைச் செய்வதாக
உத்தேசித்திருந்தேன். நேரமின்மை காரணமாக அவ்வாறெதனையும் செய்து முடிக்க
முடியவில்லை. 7.10.2 அல்லது 7.10.3 இல் திட்டமிட்டபடி பெரியளவான மாற்றங்கள்
இருக்கும்.
இருந்தாலும் இந்தப்பதிப்பில் பல கவனிக்கத்தகுந்த மாற்றங்கள் உண்டு.
1. பொதிகள் அத்தனையும் கட்ஸி பொதிக்களஞ்சியத்திலிருந்து (Gutsy repositories)
பெறப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
2. m17n-contrib பொதி நீக்கப்பட்டுள்ளது. பதிலாக m17n தமிழ் உள்ளீட்டு முறைகள்
தனியாக நிறுவப்படுகின்றன.
3. www.wsws.org போன்ற வலைத்தளங்கள் இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருப்பதால்
tam-maduram ஆஸ்கி எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளது.
4. பாமினி விசைப்பலகை வடிவத்தை பயன்படுத்துபவர்களுக்கான
"பாலினி"<http://tamilgnu.blogspot.com/2007/05/bamini-for-gnulinux.html>தன்னியக்கமாக
நிறுவப்படுகிறது.
5. குழப்பங்களைத் தவிர்க்குமுகமாக நீங்கள் பயன்படுத்தும் உபுண்டு பதிப்பைச்
சோதனையிட்டுத் திருப்திகண்டால் மட்டுமே நிறுவல் தொடரும்படி
வடிவமைக்கப்பட்டுள்ளது.
<http://bp0.blogger.com/_iWCfChmbLr0/RzeC00HwWkI/AAAAAAAAALg/CKVutOUNS1o/s1600-h/Screenshot.png>
== என்ன குறை? ==
1. ஓப்பன் ஆபீசில் தமிழ் எழுத்துருவை இயல்பிருப்பாக்குவதற்கான வழிமுறை இன்னும்
எனக்கு கண்டுபிடிக்க முடியாதிருப்பதால் இம்முறையும் அதே பழைய அரைகுறை முறை
மூலமே இப்பணி செய்யப்படுகிறது.
2. scim மென்பொருள் ஏனைய மென்பொருட்களோடு சேர்ந்து இயங்கும் போது ஏற்படும்
வேகக்குறைவு, முறிவு போன்றன தொடரக்கூடும். இதை சரிப்படுத்துவது scim மேநிலை
தொழிநுட்பவியலாளர்களுடைய பணி.
3. திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன்,
tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
4. நிறுவலின் ஆரம்பத்தில் இம்முறையும் உங்களைக்கேட்காமலே இடைமுகப்பின்
எழுத்துருவை தபுண்டு மாற்றும். (அடுத்த பதிப்பில் சரி செய்து விடுகிறேன் அதுவரை
இம்முறைப்பாட்டைச்செய்த பழனி ராஜா மன்னிக்கவும்)
5. தமிழ் விசை நீட்சி சேர்க்கப்படவில்லை. சில குழப்பங்கள் உண்டு. அடுத்த
பதிப்பில் எதிர்பார்க்கலாம்.
== நன்றி ==
- Mr. Palani Rajah
- Mr. Sethuramalingam
- Mr. Sri ramados
- Mr. T.Vasudevan
- Ven. Mettavihari
- Mr. Ravishankar
- All Ubuntu-tam group members
- Google Search Engine
== ஆதரவு ==
தபுண்டு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவுக்கும் இந்த வலைப்பதிவின் மூலமோ
மின்னஞ்சல் மூலமோ உரையாடுங்கள்.
<http://bp3.blogger.com/_iWCfChmbLr0/RzeDLkHwWmI/AAAAAAAAALw/SbFA1Q0b7mc/s1600-h/Screenshot-2.png>
--
Posted By மு.மயூரன் to GNU/Linux
குறிப்பேடு<http://tamilgnu.blogspot.com/2007/11/gutsy.html>at
11/12/2007 03:52:00 AM
--
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071112/29e97cdf/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list