[உபுண்டு_தமிழ்]பைஸ்டியில் GTK2IM தமிழ் செயல்படுத்த

K. Sethu skhome at gmail.com
Tue May 15 03:21:22 BST 2007


பைஸ்டிக்கான tamil-gtk2im பொதி நிறுவப்படுவதில் வழு ஒன்றைக் கண்டுள்ளேன். முன்னர் 
எட்ஜியில் தமிழ் gtk2im விசைப்பலகைகள் அமைப்பை apt-get insall மூலமோ அல்லது வேறு 
எந்தவொரு synaptic போன்ற நிறுவலுதவிகள் மூலம் tamil-gtk2im பொதியை நிறுவிய பின் 
அதால் தரப்படும் விசைப்பலகக்களை உடனடியாக பாவிகக்கப்படக் கூடியதாக இருந்தன. ஆனால் 
பைஸ்டியில் நிறுவிய பின் gedit போன்ற gtk சார் நிரல்களில் right-click செய்து Input 
Methods பார்க்கையில் தமிழ் gtk2im இனால் உள்ளிடப்படும் விசைப்பலகைகள் ஐந்தும் 
காணப்படுதில்லை. இதை நேற்றிரவு பார்த்தேன். இத்தகைய வழு முன்னர் (2005 களில்) வேறு 
லினக்கஸ் தளங்களில் காணப்படுவதையும் அதற்கு தீர்வுகளையும் தமிழினிக்ஸ் குழுமத்தில் 
எழுதப்பட்ட்திருந்தன. நானும் அக்காலங்கலில் சில மடல்கள் எழுத்தியிருந்தேன். அதனால் 
பைஸ்டியில் வழுவுக்கான காரணியை இலகுவாக கண்டு கொண்டேன். அவை பின் வருமாறு:

பைஸ்டியில் உள்ள tamil-gtk2im பொதியினால் 5 தமிழ் விசைப்பலகைகளுக்கான .so 
கோப்புக்களையும் உள்ளிடும் அடைவு /usr/lib/gtk-2.0/2.4.0/immodules/ ஆகும். (.so 
கோபுக்கள் மூலங்களின் இருமங்கள் ஆகும்) ஆனால் Input method module registration 
utility ஆன gtk-query-immodules-2.0 கட்டளையோ தேடுவது 
/usr/lib/gtk-2.0/2.10.0/immodules/ அடைவத்தான்.

முன்னைய உபுண்டுக்களைப் பார்க்கையில் டாப்பரில் /2.4.0/ தான் /2.10.0/ இருந்திருக்க 
வில்லை. அடுத்து எட்ஜியில்தான் /2.10.0/ அடைவப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதற்கு 
tamil-gtk2im சரியாக /2.10.0/ அடைவினுள் .so கோப்புக்களை உள்ளிட 
வைத்திருக்கின்றனர்.  tamil-gtk2im க்கான முறையே எட்ஜி, பைஸ்டி ஆகியவற்றிற்கான 
file list களை பின்வரும் இடங்கலில் பார்க்கலாம்.

http://packages.ubuntulinux.org/cgi-bin/search_contents.pl?searchmode=filelist&word=tamil-gtk2im&version=edgy&arch=i386
http://packages.ubuntulinux.org/cgi-bin/search_contents.pl?searchmode=filelist&word=tamil-gtk2im&version=feisty&arch=i386

ஆக பைஸ்டிக்கான tamil-gtk2im பொதி .so கோப்புக்களை 
/usr/lib/gtk-2.0/2.10.0/immodules/ உள்ளே இடாமல் பழைய 
/usr/lib/gtk-2.0/2.4.0/immodules/  உள் போடுவதே வழுவிற்கான காரணம் .

உபுண்டுவிற்கான tamil-gtk2im பொதிகள் காபாளர்களிடம் வழு முறைப்பாடிற்று வழு தீர்க்கும் 
வரை பைஸ்டியில் தமிழ் gtk2im பாவிக்க வேண்டுமாயின் பின்வரும் நடவடிக்கைகளைச் செய்யலாம்:

1. tamil-gtk2im பொதி /2.4.0/ உள் இட்டுள்ள .so கோபுக்களை நகல் பண்ணி சரியான 
அடைவினுள் ஒட்டவும் :

sudo cp /usr/lib/gtk-2.0/2.4.0/immodules/* 
/usr/lib/gtk-2.0/2.10.0/immodules/

2. அடுத்த படியானது registration utility யான gtk-query-immodules-2.0 
பாவித்து /etc/gtk-2.0/gtk.immodules என்பதை புதுப்பிப்பத்ற்கு பின்வரும் கட்டளை 
கொடுங்கள் :

sudo update-gtk-immodules

அடுத்து மீள்புகுதிகை செய்தபின் gtk2im தமிழ் விசைப் பலகைகள் Input Methods இல் தெரியும்.

update-gtk-immodules என்பது gtk-query-immdoules க்கு ஒரு உறை. அது செய்யும் 
gtk-query-immodules > /etc/gtk-2.0/gtk.immodules என்ற காரியத்தை நாம் 
நேரடியாக செய்ய வேண்டுமாயின் sudo rights போதாது su - root போயித்தான் செய்ய 
முடியும் என்பதையும் கண்டறிந்தேன். எனவே இந்த update-gtk-immodules என்பது இலகுவானது.

~சேது

More information about the Ubuntu-l10n-tam mailing list