[உபுண்டு_தமிழ்]அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Mon Mar 5 17:19:09 GMT 2007


தொடர்ச்சி...

இந்த பாரபட்சம் ஒன்றே இப்பதத்தினை முற்றிலும்  புறக்கணிக்க போதுமான காரணமாகும்.
மேலும் இவையனைத்தையும் உள்ளடக்கிய புதிய பெயரொன்றையும் பரிந்துரைக்குமாறு
மக்களில் பலர் எம்மிடம் கேட்டுள்ளதோடு, அவர்களே முன்வந்து (வேடிக்கையான) பல
பரிந்துரைகளையும் செய்துள்ளனர். அவைகளுள் சில தான் திணிக்கப்பட்ட ஏதேச்சாதிகார
உரிமைகள் மற்றும் அரசிடமிருந்து தோற்றுவிக்கப் பட்டு சட்டபூர்வமாக
செயல்படுத்தப்பட்ட ஏதேச்சாதிகாரங்கள் முதலியன. ப்ரத்யேக உரிமையுள்ள அதிகாரங்கள்
என்று கூட சிலர் கூறியதுண்டு. ஆனால் தளைகளை உரிமைகளாக மொழிவது என்பது
இரட்டிப்பு வேலைதான்.

இம்மாற்றுப் பரிந்துரைகளுள் சில பொருத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் "அறிவுசார
சொத்து" என்பதற்கு மாற்றுச் சொல்லினைத் தேடுவது தவறு. அதிகம்
பரவலாக்கப்பட்டிருக்கும் இப்பதத்தின் ஆழமான பிரச்சனையை   மாற்றுப் பெயர்களால்
நிரப்ப இயலாது. "அறிவுசார் சொத்து" என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கானல்
நீர். அதிகம் பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் காரணத்தினாலேயே மக்கள் அதனை
தனித்துவம் வாய்ந்த துறையாக அது காட்சியளிக்கிறது.

அடிப்படையில் மாறுபட்ட இச்சட்டங்களை ஒன்றாய் வழங்குவதற்கு கிடத்த அருஞ்சொல்லே
"அறிவுசார் சொத்து" என்பதாகும். வழக்குரைஞர் அல்லாத ஏனையோர் இப்பதம்
இச்சட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அறியும் போது இவையனைத்தும் ஒரே
கொள்கையாலும் ஒத்த செயல்திட்டத்தாலும் உந்தப்பட்டதாக பாவித்துக் கொள்கிறார்கள்.

இதைத் தாண்டி இதில் சொல்வதற்கொன்றுமில்லை. தனித்தனியே தோன்றியதாகவும்,
பலவகைகளில் பரிணாமம் பெற்று மாறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகவும் , வெவ்வேறான
பொதுக் கொள்கைகளை எழுப்பியவையாகவும் இச்சட்டங்கள் அமைகின்றன.

பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக
வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது.
சுயயுரிமை சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை
வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க
முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில்
அவசியமற்றது.

மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு
வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக
நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை துணை புரிகிறது. "அறிவுசார்
சொத்து" என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கத்தொகை
வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர்.

தொடரும்...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070305/485f3924/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list