[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

K. Sethu skhome at gmail.com
Sat Jun 30 08:23:52 BST 2007


On 06/30/2007 11:36 AM, ஆமாச்சு wrote:
> On Saturday 30 June 2007 10:56, K. Sethu wrote:
>   
>> ம்.. அப்படியாயின் தமிழில் எழுத்துப் பெயர்ப்பு : "கூபூண்டூ" ?
>>
>> ubuntu க்கு உபுண்டு என்பதை நாம் எல்லாரும்  ஏற்றுக் கொண்டு விட்டோமல்லவா -
>> அதே ஒலிப்பில்  "குபுண்டு" என்றால் நன்று என்பதே என் கருத்து.
>>     
>
> கேடீயீ  காரர்களோடதாச்சே!
>
>   
இல்லை - கேடீயீ  சூழலிற்கு உபுண்டு செயல்திட்டதின் அங்கமாக உபுண்டுக்காரர்களினால்தான் 
ஏற்படுத்தப் பட்டுள்ளது

quote from: https://wiki.kubuntu.org/Kubuntu
 >>

Kubuntu is a user friendly operating system based on KDE, the K Desktop 
Environment. With a predictable 6 month release cycle and part of the 
Ubuntu project, Kubuntu is the GNU/Linux distribution for everyone.

Kubuntu and Ubuntu are not meant to be seen as distinct projects; 
Kubuntu is part of the Ubuntu project, and they are both part of one 
development team that contributes to the whole. Kubuntu is Ubuntu with a 
different default setup, the Ubuntu CD contains only GNOME as a desktop 
environment; the Kubuntu CD contains only KDE, this is the primary 
difference.
<<


> K + Ubuntu - Kubuntu
>
> இப்படி தானே  இது வந்திருக்கும்!
>
> கே + உபுண்டு -  கேயுபுண்டு
>
>   
நான் அமெரிகாவில் இருந்த அனுபவத்தில் அத்தகைய வகை உச்சரிப்பு அமெரிக்க வட்டாரா 
வழக்கியியல்பில் இருக்க வாய்ப்புக்கள் கூட  என  கருதுகிறேன்.  உபுண்டு ஆக்கியவர் 
தென்னாபிரிக்கர் - அத்துடன் canonical.ltd ஐரோப்பிய நிறுவனம் (இலண்டனில்தானே அதன் 
தலைமையகம்)

மேலும் Kubuntu Faq பாருங்கள் :
http://www.kubuntu.org/faq.php#kubuntumeaning

 >>
What does Kubuntu mean?
 
It means "towards humanity" in Bemba 
<http://en.wikipedia.org/wiki/Bemba_language>.
Coincidently it also means free (as in beer) in Kirundi, spoken in Burundi.
Kubuntu is pronounced "koo-*boon*-too".
<<

மேற்கூறியது kubuntu ஆக்கியவர்களின் விருப்பம் ஆகவே இருக்கும். அவர்களின் Faq என்பதால்.

மயூரன் எடுத்துக்காட்டிய விக்கிபீடியா குறிப்புக்களை எழுதியவர்கள்  இதன் அடிப்படையிலேயே 
எழுதியிருப்பர்.

விக்கிபீடியாவில் எல்லாவிடங்களிலும் உத்தியோகபூர்வ பலுக்கல்களை தருவதாக  நாம் கருதக் 
கூடாது.

உதாரணத்திற்கு GNU விற்கு விக்கிபீடியாவில் பலுக்கலுகான .ogg கோப்பை கேட்டுப் 
பார்த்தால்  "கினு" என்பது போலத்தான் உச்சரிக்கின்றார்கள். அதில் "கி" என்பது க ஒலியனின் 
மாற்றொலியான /g/ யின் குற்றியலிகரம் போல (கிட்டத்தட்ட 'gi' போல). ஆனால் GNU வின் 
உத்தியோகபூர்வ தளத்தில் அவர்கள் அதன் உச்சரிப்பு "canoe" க்குக் ஒத்த ஒலிப்பு என்று 
தெளிவாக சொல்கின்றனர். அதாவது "கனு" அல்லது "கணூ". இங்கும் "க"  ஒலியனின்  
மாற்றொலியான /g/ (ga)  தான் உச்சரிப்பதற்கு. 

Kubuntu Faq கூறும் "koo-*boon*-too" பலுக்கலை தமிழிலும் பாவிக்க வேண்டுமாயின் 
"கூபூன்டூ" அல்லது "கூபூண்டூ" 

:>(  பிடிக்கலில்லை.

~சேது
 



More information about the Ubuntu-l10n-tam mailing list