[உபுண்டு_தமிழ்]Fwd: தமிழ் 99 விசைப்பலகை - கேயுபுண்டு..

K. Sethu skhome at gmail.com
Sat Jun 30 05:55:09 BST 2007


On 06/30/2007 07:41 AM, ஆமாச்சு wrote:
> On Thursday 28 June 2007 21:37, ஆமாச்சு wrote:
>  
>> libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n
>> ஆகி ய பொதிகள் நிறுவினேன். தற்பொழுது தமிழ்99 பயன்படுத்தி உள்ளிட முடிகிறது.
>>
>> யாஹூ!
>>
>> சரி.. இவற்றின் ஏதேனும் அதிகப் படியாக நிறுவி யுள்ளேனா?
>>   
> libanthy, libgd2-xpm, libm17n, m17n-contrib, m17n-db, scim-m17n ஆகிய அனைத்தும் 
> இதற்குத் தேவையா?
>
>  
ஆம். தேவை (அதிகப் படியானதாக ஒன்றும் இல்லை) - நான் june 27 தனிப்பட்ட மடலில் 
குறிப்பிட்டிருந்தேனே? பாருங்கள் :

quoted from my off list mail to you:
> >
> > > > m17n-contrib சரியாக செயல்பட தபுண்டுவின் உள் இருக்கும் வேறு பொதிகள்
> > > > நிறுவப் பட வேண்டு மா? m17n, libm17n, libanthy & m17n-contrib ??
> > >
> > > கட்டாயம். m17n-contrib விசைப்பலகைகள் மட்டுமே. ஏனையவைகள் அடிப்படை
> > > engine கள். மேலும் m17n-db க்கும் இருக்குமே?. (வீட்டில் பார்த்து
> > > பின்னர் எழுதுகிறேன்)
> >
> > நான் மேற்கூரிய நான்கு பொதிகளையும் நிறுவியும் பலன் இல்லை.
>
> பலன் இல்லை என்பதை சற்று விரிவாக கூற முடியுமா? நிறுவுகையில் வழு அறிக்கை வந்ததா?.
>
> எப்படியாயினும் மேற்கூறிய 4 பொதிகள் மட்டுமல்ல. தபுண்டு இல் பின்வரும் பொதிகள் எல்லாம் 
> நிறுவுங்கள் நீங்கள் குறிப்பிட்ட 4 க்கு மேலதிகமாக:
>
> m17n-db
> libgd2-xpm
> scim-m17n
>
> இதில் scim-m17n நிறுவாமல் விட்டால் வழு அறிக்கை ஒன்றும் வராது. ஆனால் scim இல் 
> m17n தெரியாது (அதாவது ஏனைய பொதிகள் இதில் depend இல்லை என்பதால்). scim-m17n 
> தான் சிம்முக்கும் m17n க்கும் இடையே bridge எனவே அது நிறுவிய பின்னரே scim இல் 
> m17n விசைப்பலகைகளை தெரிவு செய்து பாவிக்க முடியும்.  

m17n-contrib நிறுவாவிடில் ஆனால் ஏனைய எல்லாம் நிறுவியிருப்பினும் scim மூலம் m17n 
இன் m17n-db யிலுள்ள விசைப்பலகைகளை பாவிக்கலாம். அதில் தமிழிற்றிக்கு உள்ளது : 
ta-itrans விசைப்பலகை. இது ஆக்கியது m17n நிறுவனத்தை சேர்ந்தோரே.

m17n-contrib இன் மூலம் m17n.org இல் உள்ளது இதுவரை உபுண்டுவினர் தங்கள் repo களில் 
இதை சேர்க்கவில்லை. (கட்ஸியிலும் இதுவரை இல்லை). 

தாங்கள் தபுண்டுவில் பார்க்கும் m17n-contrib debian பொதி தபுண்டுவிற்காக மயூரனால் 
ஆக்கப்பட்டது. m17n-contrib தருவது மேலதிக இன்திக் விசைப் பலகைகளை. அவற்றுள் தமிழ் 
: ta-inscript, ta-phonetic, ta-tamil99, ta-typewriter என்பன ரெட்ஹாட் (நண்பர் 
ஃபேலிக்ஸ் உள்ள) இன்திக் குழுமத்தினால் ஆக்கப்பட்டது மேலும் தபுண்டுவிலிள்ள 
m17n-contrib.deb இல் மயூரனின் ஆவரங்கால் வி.ப. வும் உள்ளது

எந்த ஒரு பொதிக்கும் அது எவ்வெவ் பொதிகள் / நிரல்களில் சார்ந்துள்ளன (dependencies) 
என்பதை நீங்கள் அதற்கான கட்டளை மூலம் (dpkg-query கட்டளையில் சில options உடன் 
கண்டறிய முடியும் ) அல்லது synaptic / adept போன்ற நிறுவிகளில் பொதிகளின் 
properties dialog களில் பார்கலாம் . மேற்கூறிய (m17n-contrib) தவிர்ந்த 
அனைத்துக்கும் dependencies என்னவென கண்டறியலாம். இதோ உதாரணம் scim-m17n எவ்வெற்றில் 
சார்ந்துள்ளது என்பதறிய :

ஒரு முனையத்தில் பின் வரும் கட்டளை இடவும்:

 dpkg-query -W -f='${Depends}\n' scim-m17n

பதில் இப்படி வரும் :

libc6 (>= 2.3.4-1), libgcc1 (>= 1:4.0.2), libm17n-0, libscim8c2a, 
libstdc++6 (>= 4.0.2-4)

இவ்வாறு ஒவ்வொரு பொதிக்கும் அது சார்ந்த வேர் பொதிகள் / நிரல்கள் அறிய முடியும். 
அனேகமான பொதுப் பாவனை lib கள் இயங்கு தளம் நிறுவும் பொழுதோ அல்லது பின்னர் பல 
அடிப்படை தேவைகள் நிறுவப்பட்டிருக்கையில் உள்ளிடப் பட்டிருக்கலாம். உதாரணமாக மேலுள்ளதில் 
libc6, libgcc1 libstdc++6 என்பன. ஆக தபுண்டு போல ஒரு பொதியை உருவாக்குகையில் 
எல்லா சார்ந்த வேர் பொதிகளையும் ஆக்கும் பொதியினுள் கொடுக்கத் தேவையில்லை ஆனால் 
எவையெல்லாம் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்காதனவை என்று கூற முடியுமோ அவற்றையெல்லாம் 
ஆக்கும் பொதியினுள் சேர்க்க வேண்டும். இத்தகைய அலசல்களுக்கு உபுண்டுகளில் நிகழ்வட்டு 
அமர்வுகள் செய்ய முடிவது நமக்கு மேதிக வசதியாக உள்ளது.

தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கான பதில் :

ஆம் அவைகள் தேவையானவை. அத்துடன் மேலதிகமானவைகள் அல்ல. (m17n-contirb பாவிக்க 
தேவையில்லை என்றிருந்தால் அது மேலதிகமான நிறுவல்). இவற்றைத் தவிர்ந்த வேறு 
(மேற்கூறிய libc6 போன்ற) சார்ந்த பொதிகள் ஏதாவது காரணங்களுக்காக 
நிறுவியிருக்காவிடில் அல்லது நீக்கப்பட்டிருப்பின் வழு அறிக்கைகள் அவற்றை சுட்டிக் 
காட்டும் . அவ்வழுக்களை களையும் வரை இப் பொதிகளின் நிறுவல் முடியாது.
 
~சேதுMore information about the Ubuntu-l10n-tam mailing list