[உபுண்டு_தமிழ்]அலுவலகத்தில் மடல் பார்க்க முடியலையா! கூல்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Jun 21 16:09:16 BST 2007


Sethu <skhome at ...> writes:

> >
> இதில் எனது அலுவலக விண்டோ கணினியில்
> பயர்பாக்சில் பார்க்கையில் தலைப்பில்
> தமிழ் எழுத்துக்கள் சேராமல்
> தெரிகின்றன. (மடல் சரியாகத்
> தெரிகிறது). அப்
> பிரச்சினை தீர்க்க வழி உள்ளதா?
> 

கேயுபுண்டுவிலும், பயர்பாக்ஸில் இப்பிரச்சனை உள்ளது. இதனை அலுவலகத்தில் பார்வையிட்ட போது
இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் சேராமல் தெரிந்தது. கேயுபுண்டு கான்கொயரரில் இப்பிரச்சனை இல்லை.

> நமது பழைய archive களை சேர்க்க முடியாதா? (http://gmane.org/import.php)
> 
> Gmane ஐ எழுத்துப்பெயர்ப்பு செய்ய
> வேண்டுமாயின் http://gmane.org/faq.php
> இல் பின்வரும் குறிப்பைப் பாருங்கள்:

சேர்க்க வழி இருக்கிறது.

> >>
> How do you pronounce «Gmane»?
> The gee is silent, so it's quite like «mane», «main» or «mein», which 
explains
> why the main machine is called «ciao».
> <<
> 
> எனவே <<மேன்>>, <<மெயின்>> ??
> 
> Gmane போலல்லாது GNU என்பதில் G silent அல்ல.
> அதன் உத்தியோக பூர்வ
> உச்சரிப்பு  Canoe போல
> "கனூ" ஆகும். அது போல GNOME = கனோம்.
> 

சரி. இது விஷயமாக ஒரு சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு. ஆங்கிலத்தில் ஒரு சொல்லை ஒரு மாதிரி
எழுதிவிட்டு இப்படி உச்சரியுங்கள் என்று வேறு போட்டுவிடுகிறார்கள். எழுத்துக் கூட்டலுக்கும்
உச்சரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. தமிழிலும் வெற்றி, நெற்றி போன்ற இடங்களில் "ட" போல
உச்சரிக்கின்றோம். ஆனால் இது மிகச் சொற்பமே!

இதை ஜிமேன் எழுதிட்டு மேன் என்று உச்சரியுங்கள் என்று சொல்லாமா?

> 
> முதல் இரண்டு வழுக்களைத்
> தீர்க்கப்படக்
> கூடியதாயிருப்பினும், மின்னஞ்சல்
> முகவரி உறுதிப்படுத்துதல் ஒவ்வொரு
> முறையும் தேவையெனின், இச் சேவைய்
> பதிலளிக்கப் பொருத்தமற்றது.
> மின்னஞ்சலிலிருந்தே பதில் எழுதிவிடலாமே?
> 
 
சுட்டியமைக்கு நன்றி. இதற்கு என்ன வழியிருக்கிறது பார்க்கிறேன்.

-----------------

பி.கு: மேலும் ஆங்கிலக் காரர்கள் நம்ம மொழியில் எப்படி உச்சரிக்கின்றோம் என்று கவலைப் படுவதே 
கிடையாது. சென்னைக்கு வந்து ரொம்பப் பட்டாச்சு. :-( 

முன்னாடியே எழுதியிருக்கேன்... ட்ரிப்லிகேன், பூனமல்லி, ரெட் ஹில்ஸ், அட்யார், க்ரோம்பேட், 
சேத்பட், எக்மோர், ட்ரிச்சி, டாஞ்சூர் இப்படி கூட்டிகிட்டே போகலாம்.. 

என்ன கொடுமை சரவணா ;-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list