[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் - தமிழாக்கம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Jun 5 15:59:17 BST 2007


திங்கள் 04 ஜூன் 2007 17:39 யில், Tirumurti Vasudevan எழுதியது:
> சேவை மையம் புழக்கத்தில் உள்ளது

சேவை  மையம், சேவையகம் இவையனைத்தும் Server Room ன்னு ஒன்னு அலுவலகத்துல இருக்கும். 
Switches, Server எல்லாத்தையும் நல்ல பெரிய Racks ல போட்டு பத்திரப் படுத்தி வச்சுடுவாங்க.

அதுக்கு பொறுத்தமா  இருக்கும்.

வேற ஏதாச்சும் சொல் கிடைக்குமா  யோசிச்சதுல,

பூ, பழம், காய்,  கனி எல்லாம் தருவதால் தான் மரத்துக்கு "தரு" அப்படீன்னு பேர் வந்திருக்குமோ? 

சரின்னு அகராதியை  எடுத்து பார்த்ததுல,

தரு - மரம்
தருநன் - தருபவன்
தருக்கன் - கேட்கிறவன்

ன்னு இருக்கு. 

பெறுநர் - அனுப்புநர் இது தபால் துறையில் பழக்கத்தில் உள்ள கூட்டணி.

தருநர் -   Server
தருக்கர்/ பெறுநர் - Client

இந்த கூட்டணி பொருத்தமா தோணுது! :-)

தருநர்-தருக்கர் அல்லது தருநர்-பெறுநர்..

பன்மையாகிற போது.. தருவோர்-பெறுவோர்... பொருத்தமாக இருக்கும்.. தருக்கர்கள் அவ்வளவு சரியா 
படலை...

அகராதியில்..

வழங்கி என்பதற்கு கூதன், மனைவியைக் கூட்டி கொடுப்பவன், விபசாரி என்றும் பொருள் தரப் பட்டு
ள்ளது.. வியப்புதான்.. 

தருக்கம் என்றால் வாதம் என்று ஒரு பொருளும் இருக்கிறது.. 

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-l10n-tam mailing list