[உபுண்டு_தமிழ்]கே.பணிச்சூழல் தமிழாக்கம்... எஸ்.வி.என் பதிவிறக்கம்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue Jun 5 04:42:15 BST 2007


வணக்கம்,

நாம தமிழாக்கம் செய்ய வேண்டிய  கோப்புகள் இருக்கும் அடைவின் இணைய முகவரி:
http://websvn.kde.org/trunk/l10n-kde4/ta/

இதனை  பதிவிறக்க முதற்கண் தங்கள் உபுண்டு கணினியில் எஸ்.வி.என்  நிறுவப்
பட்டிருத்தல் வேண்டும். இதற்கு முனையத்திலிருந்து,

$ sudo apt-get install subversion

கட்டளைக் கொடுக்கவும்.

அதுத்து  தாங்கள் இக்கோப்புகளை  காக்க விரும்பும் அடைவிற்கு முனையத்தின்
வாயிலாக பயனிக்கவும். (உ.ம்: /home/<பயனர் பெயர்>/kde_tamizh)

பின்னர் அவ்வடைவிலிருந்து   ,

$ svn co svn://anonsvn.kde.org/home/kde/trunk/l10n-kde4/ta/

கொடுத்தால் ta அடைவு தங்கள் கணிக்கு பதிவிறக்கம் செய்யப் பட்டு விடும்.

முன்னர் பி,ஓ.எடிட் குறித்த ஆவணம் அனுப்பி யிருந்தேன். அதன் துணைக் கொண்டு
பதிவிறக்கப்பட்ட கோப்பினுள் இருக்கக் கூடிய .po கோப்புகளை  திறந்து பழகிப்
பாருங்கள்.

அவ்வப் போது ,

$ svn update

கட்டளைக் கொடுத்து கோப்புகளைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது.

தொடர்ந்து செய்ய வேண்டியது குறித்து எழுகின்றேன்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070605/0580692c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list