[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் - தமிழாக்கம்..
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Sun Jun 3 07:15:13 BST 2007
சில கருத்துக்கள்...
On 6/3/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> தங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
>
> On 6/2/07, K. Sethu <skhome at gmail.com> wrote:
> >
> > >>
> > #: src/skim.desktop:2
> > msgid "Comment=Input method platform"
> > msgstr "குறிப்பு=உள்ளீட்டு முறைக்கான ப்ளாட்பார்ம்"
> > <<
> >
> > உள்ளீட்டு முறைமை அடித்தளம் எனலாம்.
>
>
>
> இது செயலியிலில் எந்த கன்டெக்ஸ்டில் பயன்படுத்தப் படுகிறது என்பதில் தெளிவு
> இல்லாது போகவே அப்படியே பயன்படுத்தியிருந்தேன். அடித்தளம் பொருந்தும் என்றால்
> அங்ஙனம் மாற்றிவிடலாம்.
> =======================
> அடித்தளம் என்பது basement.
> தளம் என்பதே பொருத்தமாக தோன்றுகிறது.
> ============================
>
>
> ஸ்கிமுக்கான சொருகு பொதி... அல்லது ஸ்கிமுக்கான சொருகல்...
>
> அது சரி... பயர்பாக்ஸில் add-on என்று வழங்குகிறார்களே.. plug-in க்கு
> இதற்கும் என்ன வேறுபாடு?
>
> ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.
> அல்லது plug-in மற்றோரு செயலியை இணைக்க பயன்படலாம்.
> add-on ஒரு கூடுதல் செயலி.
> ==========================
>
>
> #: src/skimsetupcategory.desktop:2
> > msgid "Comment=A definition of one Skim Setup Category"
> > msgstr "குறிப்பு=ஸ்கிமினுடைய அமைப்பு வகை குறித்த விளக்கம்"
> > <<
> > ஆங்கிலத்தில் "one" எனற பதத்தை "Skim Setup Category" முன் போட்டுள்ளது
> > எதற்கு......
> >
> பல மென்பொருட்கள் ஆகிலேயர் அல்லாதவர்களால் உருவாக்கப் படுகிறன. அவர்கள்
> எழுதும் போது சில தவறுகள் ஏற்படுகிறன.
> இங்கு a தான் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. one அல்ல
>
>
> definition, இலக்கணம்
> explanation, விளக்கம்.
> description, விவரணம்
> brief, summarize சுருக்கம்
>
>
>
> #: plugins/mainwindow/skimplugin_mainwindow_config.desktop:1
> > msgid "Name=Main Toolbar"
> > msgstr "பெயர்=பிரதானக் கருவிப் பெட்டி"
> > <<
> > >>
> > #: plugins/mainwindow/skimplugin_mainwindow.desktop:2
> > msgid "Comment=Main Window"
> > msgstr "குறிப்பு=முதன்மைச் சாளரம்"
> > <<
> >
> > ta.po கோப்பினுள் போல Main Toolbar ஐ "முதன்மைக் கருவிப்பட்டை" என்றே
> > மொழிப்பெயருங்கள்.
>
>
>
> சரி.. Panel - என்பதற்கு தங்களின் பரிந்துரைத் தாருங்கள்...
> =====
> பலகம்.
> ============
>
>
>
> >>
> > #: plugins/mainwindow/skimplugin_mainwindow.desktop:1
> > msgid "Name=Toggle Docking"
> > msgstr "பெயர்=டாக்கிங் மாற்றம்"
> > <<
> >
> > "Docking" - இங்கு விண்வெளி கலன்கள் ( spacecrafts ) docking என்பதில்
> > போல இது
> > குறிப்பிடும் பொருளை இன்னொன்றுடன் இணைப்பதைக் குறிக்கிறது என நினக்கிறேன்?
> > "டாக்கிங்"
> > என ஒலிப்பெயர்ப்புக்குப் பதிலாக மொழிபெயர்ப்பு ஒன்று செய்ய வேண்டும்.
> > தற்கால அகராதி
> > ஒன்றில் இணைத்தல் என்றே உள்ளது.
> > ============
> > பொருத்தம்?
> > ============
> > skim / scim க்கான (panel) பட்டையை tray இல் வைப்பதா அல்லது floating ஆக
> > விடுவதா என்பதை தேர்வு செய்யத்தானே இது. இங்கு Toggle பெயர்ச் சொல் எனில்
> > "சுழற்றி" ,
> > வினையெனில் "சுழற்றல்" எனலாமோ? (Toggling என்பதற்கு மாற்றுதல் என்பதை விட
> > சுழற்றுதல்
> > தான் பொருத்தம் கூட எனச் சுட்டிட்காட்டியது விடுமுறைக்காக uk விலிருந்து
> > வந்துள்ள எனது
> > அண்ணன் - அவருக்கு நன்றி)
>
>
>
> toggling பயன்படுத்திய வகையில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது.. On-Off
> , Start-Stop போன்று.. இடை மாற்றம்... சரியாக இருக்குமா..
> ===============
> ஒன்றிலிருந்து மற்ற ஒன்றுதான். பல அல்ல.
> =====================
>
>
> >>
> > #: plugins/scimlauncher/skimplugin_scim.desktop:1
> > msgid "Name=SCIM Server"
> > msgstr "பெயர்=ஸ்கிம் வள்ளல்"
> > <<
> > skim = ஸ்கிம் என்பது சரி. scim என்பதை நான் உச்சரிப்பது
> > "சிம்" (இதில் நான் "சி"
> > யை ஸ் இன் முற்றியலிகரமாகவே உச்சரிப்பேன். அதாவது "ஸிம்" என்பது போல).
> >
> > உருவாக்கியோர் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்
> > என்பதைப் பார்க்க
> > வேண்டும்.
>
>
> இதை நானும் யோசிச்சேன்.. SKIM - ஸ்கேம் எனவும் SCIM - ஸ்கிம் எனவும்
> வழங்கலாமா.. கே - கேடீயீ..
> ====
> சிம், ஸ்கிம்.
> =============
>
> ஆம்.. வழங்கி - வாங்கி தான் முன்னர் பயன்படுத்தி வந்தேன்.. வழங்கும் தன்மை
> உள்ளோரை குறிக்க பிரத்யேகமாக குறிக்கும் சொல்தானே வள்ளல்.
>
> வழங்குவதால் வழங்கி அல்லது வழங்குவதால் வள்ளல் இரண்டில் பொருத்தம் அதிகம்
> எதில் உள்ளது என்றும் யோசித்தேன்...
>
>
> Web Server - இணைய (HTML) சேவைகள் வழங்குவதால் இணைய வள்ளல்... இணைய
> வழங்கி...Apache Web Server
> Application Server - செயலிகளுக்கான வள்ளல்... செயலிகள் வழங்கி... Tomcat
> Application Server
> Database Server - தரவுகளைத் தருவதால் தரவு வள்ளல்... தரவு வழங்கி..Oracle
> Database Server
>
> இப்படி இதன் பயன்பாடு நீள்கிறது.. மேலும் Client - பெறுநர், Clients -
> பெறுவோர்..
> வாங்கி.. வாங்கிகள்..
>
> Client - Server Architecture? வாங்கி - வழங்கி கட்டமைப்பு அல்லது வள்ளல் -
> பெறுநர் கட்டமைப்பு?
>
> பயன்பாடு விரிவடையும் போது சற்று சிக்கல்கள் இருக்கின்றன... இதில் இன்னும்
> கொஞ்சம் தெளிவு வேண்டும்...
>
வழங்குதல் மட்டுமே சர்வர் வேலை இல்லையே?
சேவையகம் என்றே நான் மொழிபெயர்கிறேன்.
வழங்கி கலை சொல் பிஓ வில் இருப்பினும் இதுவே பொருத்தமாக தெரிகிறது.
தி வே
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070603/834a1657/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list