[உபுண்டு_தமிழ்]மடலாடற் குழுவிற்கான நெறிகள்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Jun 1 04:14:38 BST 2007


1. தாங்கள் அனுப்பும் மடல் தமிழில் இருப்பதற்கு அதிக கவனம் கொடுக்கவும்.

2. மடலுக்கு உகந்த பொருளை பொருட் களத்தில் தரவும்.

3. மடல் மேல் மடலிடுவதைத் தவிர்க்கவும்.

4. ஒரு மடலுக்கு அடியே பதிலெழுதுவதை வழக்கமாகக் கொள்ளவும்.

உ.ம்:

> தமிழாக்கத்திற்கு எந்த செயலியினைப் பயன்படுத்தலாம்?

பி.ஓ.எடிட்

5. ஹச்.டி.எம்.எல் மடல்கள் அனுப்புவதைத் தவிர்க்கவும்.

6. தமிழாக்கம் செய்யப் படும் பி.ஓ கோப்புகள் தவிர ஏனைய பிற  இணைப்புகளை
அனுப்புவதைத்  தவிர்க்கவும்.

பரிந்துரைக்கப் படும் நெறி: திரைக் காட்சிகள் போன்றவற்றை flickr போன்ற இணைய
தளங்களின்  உதவி கொண்டு பதிவேற்றி அதன் முகவரியினை மடலில்  பயன்படுத்தலாம்.

7.தொகுக்கப் பட்ட மடலுக்கு பதிலெழுதுவதைத் தவிர்க்கவும். அங்ஙனம் எழுத
விரும்பினால் பொருளினை மடலுக்குத் தகுந்தாற் போல் மாற்றி பின்னர் பதிலெழுதவும்.


பி.கு:  இந்நெறிகள் குறித்து வரும் ஞாயிறு நமது ஐ.ஆர்.சி சந்திப்பில்
விவாதித்து செம்மைப் படுத்தலாம்.  தங்கள் ஒத்துழைப்பினை நல்கவும்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070601/07f79dcb/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list