[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் குறித்த தொழில் நுட்ப விஷயங்கள்..

K. Sethu skhome at gmail.com
Sat Jul 7 18:50:18 BST 2007


senthil raja wrote:
// I second sethu's suggestion of addressing scim & skim as scim=சிம் , 
skim=ஸ்கிம் //


அம் மடலின் பின் சென்ற வாரம் scim-devel மடலாற்ற குழுமத்தில் scim ஆக்கியோர் 
இவ்விரண்டையும் எவ்வாறு உச்சரிக்கிறார்கள் என வினா எழுப்பினேன்.
பார்க்க :  
http://www.nabble.com/Wanted%3A-Pronounciations-of-scim-and-skim-tf4006937s16577.html

நான் கேட்டிருந்த கேள்வி பினவருமாறு:

******************
My guess is that the creators pronounce "sk" in "skim" as it is in
"skip", "skim milk" etc. and to distinguish, "scim" as simply "sim"  
with "sc" like in  "scene", "science".
 
Am I right?
******************
இதுவரை அதற்குப் பதில் இன்னமும் யாரிடமும் இருந்து வரவில்லை. ஆனால் அதன் பின்னர் 
மேம்பட்டாளர் Ryo Dairiki scim மேம்பாடுகள் பற்றி  ஒரு I.R.C கலந்துரையாடலில் 
குழுமத்தினரை கலந்து கொள்ளும்படி ஒரு அழைப்பு விடுத்தார். பார்க்க : 
http://www.nabble.com/Discussion-on-IRC-tf4013060s16577.html

அவ்வழைப்பிதலில் உள்ள கலந்துரையாடுவதற்கான topics பட்டியலில் light topics கீழ் scim 
உச்சரிப்புமும் இடம் பெற்றுள்ளது:

**********
> Light topics:
> - Pronunciation of SCIM. (SCIM-MILK or S-C-I-M?)  
****************

அவர் நடத்தவுள்ள irc இல் கலந்து கொள்ள அடுத்த சில நாடகளுக்கு எனக்கு நேரம் ஒதுக்க 
முடியாது - ஆனால் இன்னும் ஒரு வாரத்தின் பின் இருப்பின் ஒரு வேளை நான் அதில் 
பங்குபற்றலாம். ஆமாச்சு நீங்கள் பங்குபற்றுவீர்களா? (scim-devel குழுமத்தில் தாங்கள் 
அங்கத்தினர் என்பதைப் பார்த்திருக்கிறேன்)

மேற்கூறிய அறிவித்தலில் அவர் அடைப்பினுள் குறிப்பிடுவதை நோக்கவும். கலந்துரையாட அவர் 
கேட்பது என்னவெனில் SCIM யை ஸ்கிம் என்றா அல்லது எஸ்-சீ-ஐ-எம் என்றா உச்சரிக்க வேண்டும் 
என்பதே. (முதலில் அவர் குறிப்பிடுவது ஸ்கிம் - ஏனெனில் skim milk என்ற பதத்தில் உள்ள 
milk ஐயும் சேர்த்து குறிப்பதால்)

ஒருக்கால் முதலில் SCIM என்று உருவாக்கிய போது ஸ்கிம் என்றே உருவாக்கியோர் அதை சொல்லி 
வந்திருக்கலாம். (school, scope, scam என்பவற்றில் sc உள்ளது போல) அப்படியானல் SKIM 
ஐ எப்படி உச்சரிப்பது என்ற வினா எழுகிறது.  ஏனெனில் ஆங்கில மொழி பேசும் நாடுகளில்  
(அமெரிக்கா உட்பட) skim  milk  இல்  உள்ள skim ஐ ஸ்கிம் என்றே உச்சரிப்பர்.

> But unlike in english, where the same pronounced words are 
> differentiated by letter variations (for eg:  sim & scim have same 
> pronounciation, but differ by their spelling), in tamil, we have same 
> spelling for both sim & scim.
>  
> To overcome this problem can we use like *ஸ்**சிம் ??*
SIM (as in "sim card in cell phone) = சிம்  என்பது  நிச்சயம் . ஆனால்  scim  
சிம் தானா என்பது இதுவரை நிச்சயம் இல்லை.

எவ்வாறாயினும் SCIM, SKIM என்ற ஆங்கில acronyms அல்லது abbreviations களுக்கு 
பலுக்கல் பற்றிய உத்தியோகபூர்வ தெளிவாக்கங்கள் இனிமேல் தான் வரும்.

அதன் பின்னர்  நாம் முடிவெடுப்பது நன்று.

~கா. சேது




More information about the Ubuntu-l10n-tam mailing list