[உபுண்டு_தமிழ்]ஸ்கிம் குறித்த தொழில் நுட்ப விஷயங்கள்..
K. Sethu
skhome at gmail.com
Sun Jul 1 07:26:22 BST 2007
On 06/30/2007 10:25 PM, ஆமாச்சு wrote:
> வணக்கம்,
>
> ஸ்கிம் குறித்த தொழில்நுட்ப விஷயங்களை அறிந்தவர்கள் பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்
> கொள்கிறேன்.
>
> இது குறித்து விரிவான ஆவணம் ஏதேனும் உள்ளதா?
scim ஆ? skim ஆ? இரண்டுமா? இப்படிக் கேடதற்கான காரணம் முன்னர் தாங்கள் scim=ஸ்கிம்
எனவும் skim=ஸ்கைம் எனவும் எழுத்துப் பெயர்ப்பு செயலாம் என்ற கருத்தை முன்
வைத்திருந்தீர்கள். நான் scim=சிம் , skim=ஸ்கிம் தான் பொருத்தம் என்பதை முன்வைத்தேன். இன்று
சற்று முன் scim-devel குழுமத்துக்கு உருவாக்கியோர் எப்படி உச்சரிக்கிறீர்கள் என்று
கேட்டு மடல் அனுப்பியுள்ளேன் - .அவ்ர்கள் பதிலைப் பார்ப்போம்.
www.scim-im.org தளத்தில் பல ஆவணங்கள் உள்ளன scim, skim பற்றி மற்றும் அச்
செயற்றிட்டங்களுகான sourcefogre.net தளங்களுக்கான தொடர்புகளும். பார்த்த ஆவனங்கள்
பல மேலிட்டதாகவும் அடிக்கடி மேம்படுத்தப் படாதவைகளாகவும் தான் தெரிகின்றன. முக்கியமாக
scim க்கான tables உள்ளிடல் முறையில் உள்ள கட்டளைகளைப் பற்றி ஆவணங்கள் இல்லாத குறை
பற்றி முன்னர் கண்டறிந்தேன் - பர்க்க : என்து மடல் :
http://sourceforge.net/mailarchive/message.php?msg_name=44BAE855.1000500%40gmail.com
அதன் கீழ் அவர்களது பதில்களையும். அவர்களது ஆவணங்கள் மேம்பட பயனர்களின் பங்கை அவர்களும்
எதிர்பார்க்கிறார்கள்.
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list